ஹோபர்ட் டென்னிஸ் : பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சானியா மிர்சா

சர்வதேச ஹோபர்ட் டென்னிஸில் இறுதி போட்டியில் சானியா மிர்சா - நாடியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஹோபர்ட் டென்னிஸ் : பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சானியா மிர்சா
சானியா மிர்சா
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஹோபர்ட் பெண்கள் இரட்டையர் டென்னிஸ் அரையிறுதி சுற்றில் சானியா மிர்சா - உக்ரைன் வீராங்கனை  கிச்செனோநாடியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஹோபர்ட் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் அரையிறுதி சுற்றில் 33 வயதான சானியா மிர்சா -  கிச்செனோநாடியா ஜோடி,   தமரா ஜிடான்செக் (சுலோவேனியா) - மேரி போஸ்கோவா (செக்குடியரசு) இணையுடன் மோதியது.

இதில் 7-6, 6-2 என்ற  நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சாங் சுவாய் - பெங்க் சுவோ இணையை எதிர்கொள்ள உள்ளனர்.


காயம் மற்றும் குழந்தை பெற்றதால் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு சானியா மிர்சா சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading