Home /News /sports /

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சாய்னா நெவால் வெற்றி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சாய்னா நெவால் வெற்றி

சாய்னா நெவால்

சாய்னா நெவால்

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indiajapan
    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் வெற்றி பெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் திங்களன்று தொடங்கியது. அதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஒரு கட்டத்தில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தங்கிய முதல் ஆட்டத்தில் மெதுவாகத் தொடங்கிய சாய்னா, ஹாங்காங் வீராங்கனையை நேர் செட்களில் வீழ்த்தினார். அனுபவமிக்க இந்திய ஷட்லர் தனது சர்வீஸைச் சரியாக வீசி  21-19 என்ற புள்ளிக் கணக்கில் முதல் ஆட்டத்தை த்ரில்லிங் முறையில் வென்றார்.
    இரண்டாவது செட் இந்திய  நட்சத்திரத்திற்கு மிகவும் எளிதாக இருந்தது, ஏனெனில் அவர் 21-9 என்ற கணக்கில் சவுகரியமான வெற்றியைப் பெற்று,  டோக்கியோவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மேலும், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பத்நாகர்-தனிஷா கிரஸ்டோ இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. மறுபுறம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.

    மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி மலேசியாவின் லோ யீன் யுவான் மற்றும் வலேரி சியோவ் ஜோடியை 21-11, 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Badminton, Japan, Saina Nehwal, Tokyo

    அடுத்த செய்தி