போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளரும் மேனேஜருமான பெர்னாண்டோ சான்டோஸை, ரொனால்டோவின் தோழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலக கோப்பை இறுதி போட்டியில் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ தாமதமாக களமிறக்கப்பட்ட நிலையில், ஜார்ஜினாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகியுள்ளது. கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில், வலிமை வாய்ந்த போர்ச்சுக்கல் அணி மொராக்கோ அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் ரொனால்டோ அணியில் இருந்தும், போர்ச்சுக்கல் தோல்வியடைந்து இருப்பதை கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.
FIFA WORLD CUP 2022 : பிரான்ஸ் - இங்கிலாந்து காலிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்
தோல்வியால் மனம் உடைந்து கண்ணீர் விட்டு ரொனால்டோ அழுத காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளன. இந்த போட்டியில் ரொனால்டோ 51 ஆவது நிமிடத்தில் தான் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார்.
அதற்குள்ளாக மொராக்கோ அணி 42 ஆவது நிமிடத்திலேயே ஒரு கோலை அடித்திருந்தது. களத்தில் சுமார் 47 நிமிடங்கள் மட்டுமே நின்ற ரொனால்டோ பல்வேறு முறை முயற்சித்தும், கோல் அடிக்க முடியவில்லை. ஒருவேளை அவர் தொடக்கத்திலேயே ஆடியிருந்தால் முடிவு வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
FIFA WORLD CUP 2022 : போர்ச்சுகல் – மொராக்கோ காலிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ்
ரொனால்டோ தாமதமாக களத்தில் இறக்கப்பட்டதற்கு அணியின் பயிற்சியாளர் ஃபெர்னான்டோ சான்டோஸ் தான் காரணம். இந்நிலையில் ரொனால்டோவின் தோழி ஜார்ஜினா பயிற்சியாளர் ஃபெர்னான்டோவை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது-
போட்டியில் இறங்கியபோது எல்லாமே மாறி இருப்பதையும், தான் மிக தாமதமாக களத்தில் இறங்கி இருப்பதையும் ரொனால்டோ உணர்ந்துகொண்டார். உலகின் சிறந்த விளையாட்டு வீரரின் திறமையை பயிற்சியாளர் குறைத்து மதிப்பிடக்கூடாது. இதுபோன்ற மோசமான நிலைமை ரொனால்டோவுக்கு ஏற்படக்கூடாது. இன்று போர்ச்சுக்கல் அணி தோல்வி அடையவில்லை. மாறாக பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது. ரொனால்டோவுக்கு எனது பாராட்டுக்கள். என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ரொனால்டோ தாமதமாக போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்டது குறித்து பயிற்சியாளர் ஃபெர்னான்டோவிடம் கேட்டபோது அது பற்றி தான் வருத்தம் கொள்ள போவதில்லை என்று கூறியிருந்தார்.
ரொனால்டோ இடம் பெறாத போர்ச்சுகல் அணி தான் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக 6 கோல்களை அடித்ததை அவர் குறிப்பிட்டுள்ளார். 37 வயதாகும் ரொனால்டோ இந்த உலக கோப்பை தொடருடன் சர்வதேச போட்டியில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA World Cup 2022