பிரெஞ்ச் ஓபனில் இருந்து பெடரர் விலகல்: முந்தைய ஆட்டம் காரணமா?

ரோஜர் பெடரர்

முதல் செட்டை கைப்பற்றிய பெடரர் அடுத்த செட்டை பறிகொடுத்தார்.  பின்னர், 3 மற்றும் 4வது செட்டை கைப்பற்றி பெடரர், 4வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் மொத்த 3 மணி நேரம் 36 நிமிடங்கள் நடைபெற்றது. 

  • Share this:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் கொரோனா பரவலுக்கு இடையே மே 30ம் தேதி பாரீஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  பிரெஞ்ச் ஓபனில் இருந்து முன்னணி வீரர், வீராங்கனைகள் விலகி வருவது போட்டி அமைப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா, பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அறிவித்தார்.

போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பை அவர் புறக்கணித்ததால் போட்டி அமைப்பாளர்கள் ஒசாகாவுக்கு அபராதம் விதித்தனர். இதையடுத்து, போட்டியில் இருந்து விலகிய ஒசாகா, தான் மன அழுத்தத்தில் உள்ளதாக காரணம் தெரிவித்தார்.

இந்நிலையில், உலகில் முன்னணி வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் பெடரர் தற்போது, போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

‘எனது அணியினருடன் கலந்தாலோசித்தேன். அதன் முடிவில் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இரண்டு முழங்கால் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்ற பிறகு, நான் என் உடல் கூறுவதை கேட்பது அவசியம்.போட்டிக்கு விரைந்து செல்லக் கூடாது’ என ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

அவரது நேற்றைய ஆட்டமே இந்த விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது. முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பெடரர் கடந்த 17 மாதங்களில் பெரிதாக எந்த போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில்  உலக தர வரிசையில் 59வது இடம் பெற்றுள்ள ஜெர்மனியின் டோமினிக் கோப்ஃபருடன் பெடரர் மோதினார்.  முதல் செட்டை கைப்பற்றிய பெடரர் அடுத்த செட்டை பறிகொடுத்தார்.  பின்னர், 3 மற்றும் 4வது செட்டை கைப்பற்றி பெடரர், 4வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் மொத்த 3 மணி நேரம் 36 நிமிடங்கள் நடைபெற்றது.

39 வயதில் 2 முழங்கால் சிகிச்சைக்கு பின்னர்  3 மணி நேரத்துக்கும் மேலாக அவர் களத்தில் இருந்து விளையாடியதை பலரும் பாராட்டியுள்ளனர். அதேவேளையில், இந்த ஆட்டம் உடல் ரீதியாக அவருக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: