அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

Vijay R | news18-tamil
Updated: September 4, 2019, 2:48 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!
ரோஜர் பெடரர்
Vijay R | news18-tamil
Updated: September 4, 2019, 2:48 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி போட்டியில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 78-வது இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவும் பலப்பரிட்சை நடத்தினார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் மாற்றி மாற்றி செட்டை கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்க கூடிய கடைசி செட்டில் டிமிட்ரோ ஆக்ரேஷமாக விளையாடி வெற்றி பெற்றார். டிமிட்ரோ 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
Loading...டிமிட்ரோ முதன்முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ரோஜர் பெடரர் இதுவரை அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளார்.

Also Watch

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...