ஆல் டைம் டென்னிஸ் கிரேட் ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடரான லேவர் கோப்பை டென்னிஸ் நாளை லண்டனில் தொடங்குகிறது.
ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோர் லேவர் கோப்பையில் இணைந்து விளையாடுகின்றனர். ரோஜர் பெடரரின் கடைசி தொடர் என்பதால் இந்த கிரேட்களும் இணைகின்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லேவர் கோப்பை 2022 சர்வதேச அரங்கில் சுவிஸ் மேஸ்ட்ரோ பெடரரின் கடைசி தோற்றமாக இருக்கும். ஃபெடரரின் டென்னிஸ் 1998 இல் தொடங்கியது, அவர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை உள்ளடக்கிய 103 சாம்பியன் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
அதன்படி அவர் பங்கேற்கும் கடைசி தொடரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் லண்டனில் நாளை தொடங்குகிறது. இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
மேலும் படிக்க : இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் தேவை - ஆர்.பி.சிங் திட்டவட்டம்
இந்திய நேரப்படி, நாளை மாலை 5 மணியளவில் இந்த போட்டி தொடங்குகிறது. உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட உள்ளார். இந்த தொடருடன் ரோஜர் பெடரர் ஓய்வு பெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதுகு காயம் அபாயகரமான நிலையில் இருப்பதால் டென்னிஸிலிருந்து விலக முடிவெடுத்தார் ரோஜர் பெடரர், ‘என் வாழ்க்கையை மேலும் அறுவைசிகிச்சைகள் இல்லாமல் வாழ விரும்புகிறேன்’ என்று ரோஜர் பெடரர் லேவர் கோப்பைக்கு முன்னதாக தெரிவித்துள்ளார். டென்னிஸை முழுக்கவும் உதறுவாரா என்று தெரியாது, ஆனால் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸுக்கு முழுக்கு போட்டு விட்டார் பெடரர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Roger Federer, Sports, Tennis