என் கதை இன்னும் முடிந்து விடவில்லை, முழு உடல்தகுதியுடன் விம்பிள்டனில் சந்திக்கிறேன்: ரோஜர் பெடரர் உறுதி

என் கதை இன்னும் முடிந்து விடவில்லை, முழு உடல்தகுதியுடன் விம்பிள்டனில் சந்திக்கிறேன்: ரோஜர் பெடரர் உறுதி

ரோஜர் பெடரர்

ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை. மாதக்கணக்கில் முழங்கால்களில் பிரச்சனை செய்தால் அதைப் பரிசீலிப்பேன். என் கதை இன்னும் முடியவில்லை என்றே கருதுகிறேன்

  • Share this:
2020 ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் செமிபைனலில் செர்பிய நம்பர் 1 நோவக் ஜோகோவிச்சிடம் தோற்ற பிறகு டென்னிஸ் பக்கம் பெடரர் வரவில்லை. 20 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களுடன் ரஃபேல் நடாலுடன் சமனிலை வகிக்கிறார் பெடரர்.

முழங்காலில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்ததால் 13 மாதங்கள் டென்னிஸை ரோஜர் பெடரரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 39 வயதாகும் இந்த மகா டென்னிஸ் நட்சத்திரம் தன் கதை இன்னும் முடிவடையவில்லை, விம்பிள்டனில் முழு உடல் தகுதியுடன் சந்திக்கிறேன் என்று உறுதியாகக் கூறுகிறார்.

இந்த வாரம் நடைபெறும் கத்தார் ஓபனில் பெடரர் ஆடுவார் என்று பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தத் தொடருக்கான வீரர்கள் தரவரிசையில் பெடரர் அமெரிக்க ஓபன் சாம்பியன் டோமினிக் தியமை விட குறைவான நிலையைத்தான் பெற்றுள்ளார்.

மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற தோஹாவில் முதல் சுற்று விலக்கு பெற்றார் பெடரர். அடுத்த போட்டி டாம் இவான்ஸ் உடனோ அல்லது பிரான்ஸ் வீரர் ஜெரெமி சார்டியுடனோ இருக்கலாம்.

“கடந்த சில மாதங்களாக சிறிய போட்டிகளில்தான் ஆடிவருகிறேன். நான் மீண்டும் நல்ல பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. வலுவாகவும் உடல் தகுதியுடனும் இன்னும் வேகமாக நகர்தலும் அடங்கிய ஒரு முழுமையான நிலை எய்த வேண்டும் என்று கருதுகிறேன்.

இதை கணக்கிட்டு பார்த்தால் விம்பிள்டனுக்கு நான் 100% உடல் தகுதியுடன் வருவேன். அப்போது முதல்தான் எனக்கு சீசன் தொடங்குகிறது. அதுவரை எல்லாமே “எப்படிப் போகிறது என்று பார்ப்போம்” என்ற நிலையே.

ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை. மாதக்கணக்கில் முழங்கால்களில் பிரச்சனை செய்தால் அதைப் பரிசீலிப்பேன். என் கதை இன்னும் முடியவில்லை என்றே கருதுகிறேன்.

அதாவது டென்னிஸ் ஆட்டத்தை நான் மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன் என்பதைத் தவிர வேறு எனக்கு எதுவும் இல்லை. ஆனால் மீண்டும் வந்து ஆடத் தூண்டுவது எதுவெனில் மீண்டும் பெரிய வீரர்களுடன் ஆடி அந்த உச்ச நிலையை தொட வேண்டும் என்பதே. பெரிய தொடர்களை வெல்ல வேண்டும் என்பதும் என் எண்ணம்” என்றார் ரோஜர் பெடரர்.
Published by:Muthukumar
First published: