Home /News /sports /

நான் வெற்றியை விரும்புபவன், அது இல்லையெனில் நிறுத்தி விட வேண்டியதுதான் - ரோஜர் பெடரர் போட்ட ஓய்வு குண்டு

நான் வெற்றியை விரும்புபவன், அது இல்லையெனில் நிறுத்தி விட வேண்டியதுதான் - ரோஜர் பெடரர் போட்ட ஓய்வு குண்டு

ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்

டென்னிஸ் உலகின் ஆல் டைம் கிரேட், அல்லது ஒரே கிரேட் என்று கருதப்படும் சுவிட்சர்லாந்து நட்சத்திரம் ரோஜர் பெடரரின் மீள் வருகையை உலகம் முழுதும் ரசிகர்கள் எதிர்ப்பாத்து வரும் வேளையில் ஓய்வு பெறப்போவதாக பெடரர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    நான் வெற்றியை விரும்புவன், அது இல்லையெனில் நிறுத்தி விட வேண்டியதுதான் - ரோஜர் பெடரர் போட்ட ஓய்வு குண்டுநான் வெற்றியை விரும்புவன், அது இல்லையெனில் நிறுத்தி விட வேண்டியதுதான் - ரோஜர் பெடரர் போட்ட ஓய்வு குண்டு
    டென்னிஸ் உலகின் ஆல் டைம் கிரேட், அல்லது ஒரே கிரேட் என்று கருதப்படும் சுவிட்சர்லாந்து நட்சத்திரம் ரோஜர் பெடரரின் மீள் வருகையை உலகம் முழுதும் ரசிகர்கள் எதிர்ப்பாத்து வரும் வேளையில் ஓய்வு பெறப்போவதாக பெடரர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    விம்பிள்டன் 2022-ல் ரோஜர் பெடரர் ஆடியிருக்க வேண்டியது, ஆனால் காயம் காரணமாக அவர் மீண்டும் டென்னிஸ் ஆடுவது செப்டம்பருக்குத் தள்ளி வைக்கப்பட்டது. 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இவரது சாதனையை இப்போதுதான் செர்பிய நட்சத்திர நோவக் ஜோகோவிச் முறியடித்தார்.

    கடைசியாக டென்னிஸ் மட்டையுடன் பெடரரை ரசிகர்கள் பார்த்தது கடந்த ஆண்டு ஆல் இங்கிலாந்து கோப்பை போட்டித் தொடரில்தான் அதில் பெடரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் என்பவரிடம் தோற்றார்.
    இந்நிலையில் ரோஜர் பெடரர் விரக்தியிலோ போதுமென்ற மனமே பொன் செய்யும் விருந்து என்ற மனப்பான்மையிலோ பேட்டி அளித்திருப்பார் போலும், அவர் கூறியதாவது, “நான் வெற்றியை விரும்புபவன், ஆனால் இனியும் சவாலாக ஆட முடியவில்லை எனில் நிறுத்துவது சிறந்தது. எனக்கு டென்னிஸ் தேவை என்று நான் நினைக்கவில்லை.

    சின்ன சின்ன விஷயங்களே எனக்கு போதுமானது. என் மகன் எதைச் சரியாக செய்யும் போதும் என் மகள் நல்ல ரேங்க் எடுக்கும் போதும் கிடைக்கும் சந்தோஷங்களே போதும் என்று தோன்றுகிறது. டென்னிஸ் என் ஒரு அங்கம்தானே தவிர என் அடையாளத்தின் முழுமை அல்ல.

    நான் டென்னிஸில் இருக்க விரும்புகிறேன், ஆனால் முழு ஆற்றலுடன், சில வேளைகளில் என்னால் இயன்றதை விட அதிக முயற்சியுடன் ஆட விரும்புகிறேன். ஆனால் இதை விளையாட்டுக்கு வெளியேயும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். தொழில் முறை வாழ்க்கை எப்போதும் இருந்து கொண்டே இருக்க முடியாது, அது பரவாயில்லை.

    இந்த ஆண்டு விம்பிள்டனில் ஆட முடியாமல் டிவியில் பார்த்தது உண்மையில் எனக்கே விசித்திரமாக இருந்தது. 1998 முதல் ஒருமுறை கூட விம்பிள்டன் தொடரை தவற விட்டதில்லை. நான் நீண்ட காலம் வீட்டை விட்டு பிரிந்து இருந்து விட்டேன் ஆகவே கொஞ்சம் நிம்மதியுடன் இருப்பது நல்லதுதானே. கொரோனா வைரஸினால் நான் டென்னிஸ் ஆடுவதை தேர்ந்தெடுத்து ஆடுகிறேன்.

    டென்னிஸ் போட்டிகள் மிக அதிகமாக இருக்கின்றன. ஆகவே ஒரு இடைவேளை தேவை. உலகம் முழுதும் நண்பர்கள் இருக்கிறார்கள், கொஞ்ச காலம் அமெரிக்க, மெல்போர்ன் நண்பர்களைச் சந்திக்கவில்லை.  ஆனால் நான் நேர்மையாகக் கூற வேண்டுமென்றால் வீட்டில் இருப்பதை உண்மையில் நேசிக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய சாதக அம்சம்.

    விளையாட்டை மிஸ் செய்கிறேன், அது உண்மைதான், ஆனால் அதே வேளையில் வீட்டில் சாதாரணமாக இருப்பதும் நன்றாகத்தான் உள்ளது.” என்று நீண்ட பேட்டி அளித்தார் ரோஜர் பெடரர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Roger Federer

    அடுத்த செய்தி