24 ஆண்டுகள் டென்னிஸ் உலகில் கொடிக்கட்டிப் பறந்த, இதுவரையிலான சிறந்த டென்னிஸ் வீரர் என்று நிபுணர்களாலும் பண்டிதர்களாலும் வர்ணிக்கப்படும் ரோஜர் பெடரர் கடைசியாக மட்டையை ஆணியில் மாட்டிவிட்டார். கடைசியாக அடுத்தவாரம் லேவர் கோப்பையில் ஆடிவிட்டு ஓய்வு பெறுகிறார் ரோஜர் பெடரர்.
பீட் சாம்ப்ராஸ், அகாஸி டென்னிஸ் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் குறிப்பாக பீட் சாம்பிராஸ் கொற்றத்தை அடக்க யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்த தருணத்தில் விடிவெள்ளியாக முளைத்தார் ரோஜர் பெடரர். பெரிய பெரிய பண்டிதர்களெல்லாம் இவரது ஆட்டத்தை இதுவரை டென்னிஸ் தந்திராத, இதுவரை யாரும் பார்த்திராத அபூர்வ டென்னிஸ் திறமை என்று ரோஜர் பெடரரை பாராட்டதவர்கள் இருக்க முடியாது.
எதிராளியின் உத்தி என்னவென்பதை அறிய ஒன்றிரண்டு செட்களை இழந்தாலும் பரவாயில்லை என்று ஆடி அதன் பிறகு எதிராளியின் டென்னிஸ் ஆட்டத்தையே மறக்கடிக்கச் செய்யும் ஒரு ஆட்டக்காரர் ரோஜர் பெடரர். ஃபோர்ஹேண்ட், பேக்ஹேண்ட் டவுன் த லைன், கிராஸ் கோட் ஷாட்கள், வாலிகள், பந்தை தூக்கிவிடுதல், நெட்டுக்கு அருகில் வந்து வெளுத்து வாங்குதல், பேஸ்லைனில் இருந்து பொறுமையாக நீண்ட வாலிக்களை ஆடி எதிராளியை களைப்படையச் செய்தல் என்று டென்னிஸின் பன்முக சாத்தியங்களை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் ரோஜர் பெடரர்.
ரபேல் நடால் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்திலும் சமீபத்தில் நோவக் ஜோகோவிச் தன் 21 வது கிராண்ட்ஸ்லாமை வென்று 2ம் இடத்திலும், பெடரர் 3ம் இடத்திலும் இருக்கும் ‘பிக் 3’ என்று அழைக்கப்படும் மும்மூர்த்திகளில் பெடரர் பிரியாவிடை பெற்று விட்டார். இந்த மூவருக்கும் இடையிலான போட்டி டென்னிஸ் ரசிகர்களை சீட் நுனிக்கு நகர்த்துவதாகும், கிராண்ட் ஸ்லாம்கள் இவர்களை வைத்து நிறைய சம்பாதித்தன என்றால் மிகையாகாது.
ஆயிரம் ஷாட்கள் இருந்தும் டென்னிஸ் ஆட்ட வகைகள் இருந்தும் பெடரர் தான் நெட்டுக்கு அருகில் வந்து ஆடும்போது எதிராளி பந்தை அவர் தலைக்கும் மேல் மெதுவாகத் தூக்கி விடும்போது திரும்பி ஓடிப்போய் தன் இரண்டு கால்களுக்கும் இடையே மட்டையை விட்டு ஒரு ஷாட் ஆடுவார் பாருங்கள், அது லாராவின் நடன புல்ஷாட்டுக்கும் கோலியின் கவர் ட்ரைவுக்கும், சச்சினின் நேர் ட்ரைவுக்கும் ஒப்பான பேரழகு.
Also Read: டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ரோஜர் ஃபெடரர் ஓய்வு..!
ஃபெடரரின் சாதனைத்துளிகள் இதோ:
ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார், ரஃபா நடால் (22), நோவக் ஜோகோவிச் (21) ஆகியோருக்கு பின்தங்கியுள்ளார். 103 பட்டங்களைப் பெற்றார், ஜிம்மி கானர்ஸின் ஓபன் எரா சாதனையான 109 க்குப் பிறகு இரண்டாவது.
1,251 ஒற்றையர் போட்டிகளில் வென்றார், கானர்ஸின் 1,274 க்குப் பின் ஓபன் எராவில் இரண்டாவது. உலகின் முதல் இடத்தில் (237) தொடர்ந்து பல வாரங்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மூத்த வீரர் (36 ஆண்டுகள், 320 நாட்கள்). ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக விம்பிள்டன் பட்டங்கள் (8). விம்பிள்டன் வென்ற அதிக வயதான ஆண்கள் வீரர் (2017 இல் 35 ஆண்டுகள், 342 நாட்கள்).
1,526 ஒற்றையர் (W 1,251) மற்றும் 223 இரட்டையர் (W 131) போட்டிகளில் விளையாடிய அவரது வாழ்க்கையில் ஒரு போட்டியிலிருந்தும் பாதியில் ஆடாமல் போனதில்லை.
2003-07 முதல் விம்பிள்டன் மற்றும் 2004-08 வரை யு.எஸ். ஓபன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம்களை தொடர்ந்து ஐந்து முறை வென்ற ஒரே வீரர். ஆண்கள் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளை 10 முறை எட்டிய ஒரே வீரர் (2005-06). அவர் மொத்தம் 31 இறுதிப் போட்டிகளில் விளையாடினார், நோவக் ஜோகோவிச்சின் சாதனை எண்ணிக்கையான 32 ஐ விட ஒன்றில் பின்தங்கியிருந்தார்.
ஒரே காலண்டர் ஆண்டில் மூன்று முறை (2006, 2007 மற்றும் 2009) நான்கு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளை எட்டிய ஒரே வீரர்.புல்வெளியில் (65) நீண்ட வெற்றிகளைப் பெற்றதற்காக ஓபன் எரா சாதனையையும் (65) ஹார்ட் கோர்ட்டுகளில் (56) ஆல்-டைம் சாதனையையும் படைத்துள்ளார்.
களிமண், புல் மற்றும் கடினமான மைதானங்களில் குறைந்தது 10 பட்டங்களை வென்ற ஆண்கள் மட்டுமே. ஏடிபி டூரில் (2003-05) நேராக 24 இறுதிப் போட்டிகளில் வென்றார்.ஆண்டு இறுதி டூர் ஃபைனல்ஸில் அதிக பட்டங்கள் (6) பெற்ற சாதனையை வைத்துள்ளார். இதில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Roger Federer, Tennis, Tennis Star