நாட்டின் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் விதமாக ரிலையன்ஸ் குழுமம் இந்தியன் ஒலிம்பிக் கூட்டமைப்புடன் நீண்ட ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுக்களையும், வீரர்களையும் ஊக்குவித்து அவர்களை சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கச் செய்யும் நோக்கில் இந்த ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, பல்விளையாட்டு போட்டிகளான காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகளை ஆகிவயற்றுக்கு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பிரதான பார்ட்னராக ரிலையன்ஸ் குழுமம் செயல்படும். மேலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் இல்லத்தை ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புடன் இணைந்து உருவாக்கவுள்ளது. அத்துடன், விரைவில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் சூழலை உருவாக்க சிறந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் குழும இயக்குனரும், இந்தியன் ஒலிம்பிக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நீட்டா அம்பானி கூறுகையில், உலக விளையாட்டு அரங்கில் இந்தியா முன்னணி இடத்திற்கு கொண்டு செல்வது எங்களின் கனவு. இதை நிறைவேற்றும் விதமாகவே ரிலையன்ஸ் குழுமம் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.விளையாட்டில் ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கு துணை நிற்கு ஊக்குவிக்கும் விதமாக உலக தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி, சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதே எங்கள் இலக்கு என்றார்.
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் மேம்பாட்டிற்கு இது ஒரு முக்கிய நகர்வு எனவும் இதற்காக ரிலையன்ஸ் குழுமம் மற்றும் நீட்டா அம்பானிக்கு நன்றி என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக சதுரங்க விளையாட்டில் முடிசூடா மன்னர்களாக திகழும் இந்தியர்கள்
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் 140ஆவது கூட்டத்தை இந்தியா நடத்தவுள்ளது. இந்த கூட்டம் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள ஜியோ உலக வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nita Ambani, Olympic 2024, Olympic Council, Reliance Foundation