மங்கோலிய நாட்டில் உள்ள உலான்பத்தார் நகரில் 2022 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய வீரர் ரவி குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 57 கிலோ பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரவி குமார் கசகஸ்தான் வீரர் ராகத் கல்சானை எதிர்கொண்டார்.
ஆரம்பத்தில் ரவி குமார் திணறிய நிலையில், கசகஸ்தான் வீரர் முதலில் புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற்றார். ஆனால், ஆட்டத்தின் பிற்பகுதியில் சுதாரித்துக் கொண்ட ரவி குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கசகஸ்தான் வீரரை வீழ்த்தினார். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் ஹாட்ரிக் தங்கப் பதக்கத்தை வென்று ரவி குமார் சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்னர் இந்தியா மற்றும் கசகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ரவி குமார் தங்கம் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: பவுலிங்கில் ஒரே ஓவரில் 4 விக்கெட், பேட்டிங்கில் 7 பந்துகளில் 40 ரன்கள்... தெறிக்கவிட்ட ரஷல்.. ஆனாலும் கேகேஆர் தோல்வி
ஹரியானா மாநிலத்தின் சோனிபேட் பகுதியைச் சேர்ந்த 24 வயது வீரரான ரவி குமார், கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ரவி குமாரின் இந்த வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தங்கத்தை இந்தியா வென்றுள்ளது. இன்று நடைபெற்ற மற்றொரு இறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் கவ்ரவ் பால்யான் ஈரான் வீரர் அலி பக்தியாரிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியா இந்த தொடரில் மூன்று வெள்ளி, எட்டு வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.