முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘இது எனக்கு துக்கமான நாள்’ - ரோஜர் பெடரர் ஓய்வு முடிவுக்காக நடால் வேதனை

‘இது எனக்கு துக்கமான நாள்’ - ரோஜர் பெடரர் ஓய்வு முடிவுக்காக நடால் வேதனை

ரோஜர் ஃபெடரெர் - ரஃபேல் நடால்

ரோஜர் ஃபெடரெர் - ரஃபேல் நடால்

ஃபெடரரும் நடாலும் நேரடியாக 40 முறை விளையாடியுள்ளனர், நடால் 24-16 என ஒட்டுமொத்தமாக முன்னணியில் இருந்தார், இதில் 14-10 ஆகிய இறுதிப் போட்டிகளும் அடங்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், பெடரரின் ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பெடரர் ஓய்வை அறிவித்த நாள் தனக்கு துக்க தினம் என்று கூறியுள்ளார் நடால்.

பந்து எடுத்துப் போடும் ஜூனியராக டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கிய ஃபெடரர், தனது குழந்தைப் பருவக் கனவான சிறந்த முறையில் விளையாட வேண்டும் என்ற கனவை நினைவாக்கிக் கொண்டார்.  அவர் எட்டு முறை விம்பிள்டனை வென்றார். 2018 இல் - ஆறு ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களையும், ஐந்து யுஎஸ் ஓபன் பட்டங்களையும் (அனைத்தும் தொடர்ச்சியாக என்பது ஒரு சாதனை) மற்றும் ஒரு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

1985-ம் ஆண்டின் ரவி சாஸ்திரி போல் பாண்ட்யா ஜொலிப்பார்- சுனில் கவாஸ்கர்

ஃபெடரர்-நடால் டென்னிஸ் சேலஞ்ச் என்பது ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோருக்கு இடையேயான நவீனகால டென்னிஸ் போட்டிகளாகும், இது டென்னிஸ் வரலாற்றில் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறது. ஃபெடரரும் நடாலும் நேரடியாக 40 முறை விளையாடியுள்ளனர், நடால் 24-16 என ஒட்டுமொத்தமாக முன்னணியில் இருந்தார், இதில் 14-10 ஆகிய இறுதிப் போட்டிகளும் அடங்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக நேற்று (செப். 15) அறிவித்தார். 41 வயதான அவர், தனது உடல் ஒத்துழைக்க மறுக்கும் காரணத்தால், டென்னிஸ் வாழ்வுக்கு முழுக்குப்போடுவாத தனது ஓய்வு குறித்து அவர் வெளியிட்ட நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

top videos

    இந்நிலையில் ரோஜர் பெடரர் ஓய்வு குறித்து நடால் தன் ட்விட்டர் பதிவில், “என் நண்பனும் வைரியுமான பிரிய ரோஜர் பெடரர், இந்த நாள் வரவே கூடாது என்று விரும்பினேன். இந்த நாள் எனக்கும், விளையாட்டிற்கும் மிகுந்த சோகமான தினமாகும். இத்தனை ஆண்டுகளாக களத்திலும், களத்திற்கு வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டதில், மகிழ்ச்சியும் பெருமையும் என்பதைத் தாண்டி, அதனை எனக்கான மிகப்பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன்" என்று ரபேல் நடால் தன் சமூக ஊடகப்பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

    First published:

    Tags: Rafael Nadal, Roger Federer, Tennis