Home /News /sports /

நீச்சலில் தேசிய சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன்

நீச்சலில் தேசிய சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன்

மகன் வேதாந்துடன் நடிகர் மாதவன்

மகன் வேதாந்துடன் நடிகர் மாதவன்

புவனேஸ்வரில் நடைபெற்ற நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

    புவனேஸ்வரில் நடைபெற்ற நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

    நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், ஒரு நீச்சல் வீரர். அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜீனியர் நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார்.

    இப்போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கம் வென்றார் வேதாந்த். இதற்கு முன்பு இதே போன்ற 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார்.

    இப்போட்டியில் அவர் மராட்டியத்தின் சார்பில் பங்கேற்றார். வேதாந்தின் இந்த வெற்றியை மாதவன் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் போட்டியின் காணொலியையும் பகிர்ந்துள்ளார்:



    தன் மகனின் இந்த சாதனையை அடுத்து நெகிழ்ச்சியடைந்த மாதவன் ‘நெவர் சே நெவர்’ என்ற வாசகத்துடன், கட்டப்பட்ட கைகள், ரெட் ஹார்ட், ஹக் இமோஜிக்களுடன் பகிர்ந்துள்ளார்.

    கடந்த ஏப்ரலில்தான் வேதாந்த் கோபன் ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் தொடரில் 800 மீ ஃப்ரீஸ்டைலில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Actor Madhavan

    அடுத்த செய்தி