முகப்பு /செய்தி /விளையாட்டு / டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை தனலஷ்மியின் 200மீ புதிய சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை தனலஷ்மியின் 200மீ புதிய சாதனை

தனலஷ்மி சேகர்

தனலஷ்மி சேகர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்ற தனலஷ்மி சேகர் கோசனோவ் நினைவு தடகளப் போட்டி 200மீ ஓட்டத்தில் தன் சொந்த சாதனையை முறியடித்து அசத்தியதோடு நிகழ்விலும் வென்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்ற தனலஷ்மி சேகர் கோசனோவ் நினைவு தடகளப் போட்டி 200மீ ஓட்டத்தில் தன் சொந்த சாதனையை முறியடித்து அசத்தியதோடு நிகழ்விலும் வென்றார்.

தனலஷ்மி சேகர் 200 மீ ஓட்டத்தில் 22.89 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தனது சொந்த சாதனையை நிகழ்த்தியதோடு வெற்றியும் பெற்றார்.

இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் தனலஷ்மி, 2002-ல் சரஸ்வதி சாஹா அமைத்த 22.82 வினாடி என்ற 20 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடிப்பதைத் தவறவிட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கஜகஸ்தானின் ஓல்கா சஃப்ரோனோவா 23.21 வினாடிகளில் ஓடி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். டூட்டி சந்த் 23.60 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு 2022 இல் தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டத்தில் மட்டுமே போட்டியிடுவார்.

பர்மிங்காம் 2022 க்கு ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள இந்திய தடகள வீரர்களில், பெண்கள் ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி மற்றும் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் வீராங்கனையான ஆன்சி சோஜன் ஆகியோர் தத்தமது போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தங்களின் தயார்படுத்தலை சிறப்பாகச் செய்துள்ளனர்

அன்னு ராணி (62.29 மீ) பெண்களுக்கான ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தலைமை ஏற்க, ஷில்பா ராணி (56.16 மீ) மற்றும் சஞ்சனா சவுத்ரி (55.12 மீ) ஆகியோருடன் மேடையில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

நீளம் தாண்டுதலில் ஆன்சி சோஜன் 6.44 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். இருப்பினும், ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் எல்தோஸ் பால் (16.55 மீ), கார்த்திக் உன்னிகிருஷ்ணன் (16.15 மீ) ஆகியோரை அஜர்பைஜானின் நஜிம் பாபயேவ் (16.93 மீ) வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தனர்.

First published:

Tags: Asian Athletics Championship