முகப்பு /செய்தி /விளையாட்டு / கத்தார் ஓபன் டென்னிஸ் : ஆண்டி முரேவை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றார் மெட்வடேவ்

கத்தார் ஓபன் டென்னிஸ் : ஆண்டி முரேவை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றார் மெட்வடேவ்

டேனில் மெட்வடேவ்

டேனில் மெட்வடேவ்

முதல் செட்டில் 4-1 என்ற கணக்கிலும், 2ஆவது செட்டில் 3-1 என்ற கணக்கிலும் மெட்வடேவ் அதிகவேகமாக புள்ளிகளை குவித்திருந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதியாட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் இங்கிலாந்தின் ஆண்டி முரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்திற்கு ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே ஆகியோர் தகுதி பெற்றனர். நேற்று நடந்த இந்த போட்டியில், ஆண்டி முர்ரேவை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெட்வடேவ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மெட்வடேவ் இந்த ஆட்டத்தில் ஆண்டி முரேவை எளிதாக வீழ்த்தி கோப்பையை வென்றார்.

முதல் செட்டில் 4-1 என்ற கணக்கிலும், 2ஆவது செட்டில் 3-1 என்ற கணக்கிலும் மெட்வடேவ் அதிகவேகமாக புள்ளிகளை குவித்திருந்தார். தோல்விக்கு பின்னர் ஆண்டி முர்ரே கூறுகையில், ‘மிகவும் திறமையான ஆட்டக்காரருக்கு எதிராக இந்த இறுதி போட்டியில் விளையாடியுள்ளேன். டேனில் எனக்கு பிடித்தமான வீரர்களில் ஒருவர். எனது ஆட்டம் திருப்தி அளிக்கிறது. வெற்றி பெற்ற டெனில் மெட்வடேவிற்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Tennis