ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக் கோப்பை கால்பந்து தொடர்: கேமரூனை போராடி வென்ற சுவிட்சர்லாந்து

உலகக் கோப்பை கால்பந்து தொடர்: கேமரூனை போராடி வென்ற சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து அணி வெற்றி

சுவிட்சர்லாந்து அணி வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், கேமரூன் அணிக்கு எதிரான போட்டியில் சுவிட்சர்லாந்து அணி போராடி வெற்றிபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து அணி, தனது முதல் லீக் போட்டியில் கேமரூன் அணியை எதிர்கொண்டது. அல்-வக்ரா நகரில் அல்-ஜனோப் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதியதால், முதல் பாதி ஆட்டம் கோல் எதும் இன்றி சமநிலையை எட்டியது. இதையடுத்து, இரண்டாவது பாதி தொடங்கிய சிறுதி நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர் எம்போலோ, கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார்.

    இதையும் படிங்க: கடைசி நிமிடத்தில் கேப்டன்ஷிப் மாற்றம்.. ஷிகார் தவான் ஆதங்கம்

    ஆனால், கடைசி வரை போராடியும் கேமரூன் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: FIFA, FIFA World Cup 2022