ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கத்தார் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடல் என்ன? பலப்பரீட்சைக்கு மத்தியில் பாடல் உருவான சுவாரஸ்ய கதை

கத்தார் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடல் என்ன? பலப்பரீட்சைக்கு மத்தியில் பாடல் உருவான சுவாரஸ்ய கதை

கத்தார் உலக கோப்பை கால்பந்து

கத்தார் உலக கோப்பை கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து தொடரை சாமானிய மக்களிடன் எளிதாக கொண்டு சேர்க்கும் கலைதான் World Cup Anthem பாடல்கள். கத்தார் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடல் என்ன? பலப்பரீட்சைக்கு மத்தியில் பாடல் உருவான சுவாரஸ்ய கதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே நம்மை எல்லாம் கொண்டாட்ட மனநிலைக்கு தயார்படுத்துவதும், எதிர்பார்ப்பை கிள்ளிவிடுவதும் Anthem பாடல்கள் தான் மைதானத்தில் ஆட்டம் போடும் ரசிகர்களுக்கு ஒரு வாம் அப் தருவது போல் நம்மை இருக்கும் இடத்தில் ஆடவைக்க Anthems க்கு பெரும்பங்குண்டு

ஃபிஃபா கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 1962ம் ஆண்டு சிலியில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது அதிகாரப்பூர்வமாக Anthem பாடல் வெளியிடப்பட்டது. The Rock of the world cup என்ற பாடல் ஃபிஃபாவின் முதல் Anthem- மாகும். இதற்கு பிறகு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கட்டாயமாகவே Anthem பாடல்கள் மாறிவிட்டது. போட்டியை நடத்தக்கூடிய நாட்டின் கலாச்சாரம், கால்பந்து வரலாறு, வெற்றியாளர்கள், சுவரஷ்யமான கோல் காட்சிகள், என நமது நான்கு வருட ஏக்கத்தீயில் எண்ணையை ஊற்றுகிறது. அந்தவகையில் நடப்பாண்டி நான்கு பாடல் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் எப்படி உருவானது? உலகம் முழுவதும் ஏன் எவ்வளவு ரசிகர்கள்?

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கலாச்சாரமாக மாறிவிட்ட Anthem பாடல்கள் ஆரம்பத்தில் போட்டியை நடத்தக்கூடிய நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியில் தயாரித்து பிறகு ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 2002க்கு பிறகு விளம்பரயுத்திக்காக நிறைய மொழிகளில் நிறைய கலைஞர்கள் மூலம் பாடல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

நிறைய பாடல்கள் சமூக கருத்துக்களையும், கலாச்சாரத்தையும் சுமந்துவந்து கால்பந்து விளையாட்டு மீதான ஈர்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. உலகக் கோப்பை கால்பந்து பாடல்கள் நம்மை கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச்சென்றாலும் வரலாறு மற்றும் பழைய நினைவுகளை கடத்தும் கலையாகவும் மிலிர்கிறது

Published by:Arunkumar A
First published:

Tags: FIFA, FIFA World Cup 2022, Qatar