PV Sindhu | அரையிறுதி தோல்விக்கு பின்னர் சிந்து கண்ணீருடன் பேசினார்.. தந்தை நெகிழ்ச்சி...

தந்தையுடன் பி.வி.சிந்து

அரையிறுதி தோல்விக்கு பின்னர் சிந்துவிடம் தொலைபேசியில் பேசியபோது கண்ணீருடன் பேசினார், எனக்காக வெண்கலப் பதக்கம் வென்றுதருமாறு அவரிடம் கேட்டேன் என சிந்துவின் தந்தை ரமனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.

அரையிறுதி தோல்வியில் இருந்து மீண்டு வந்த சிந்து 3வது இடத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனையான He Bingjiao-வை இன்று எதிர்கொண்டார். இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிந்துவின் கையே ஓங்கி இருந்தது. இறுதில் 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய சிந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஏற்கனவே 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் சிந்துவுக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும்.

Also Read:  ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை.. இரண்டாவது முறையாக பதக்கம் வென்றார்

சிந்து வெற்றி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கும் அவரின் தந்தை ரமணா ஹைதராபாத்தில் நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “என் மகள் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

sindhu


இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கும், அரசு மற்றும் ஸ்பான்சர்களுக்கும் முக்கியமாக சிந்துவின் பயிற்சியாளர் பார்க்கிற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிந்துவின் பயிற்சியாளர் கடினமாக செயல்பட்டார். என்றார்.

Also Read:   ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து! சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்

தொடர்ந்து பேசிய அவர், சிந்துவுடன் நேற்று தொலைபேசியில் பேசினேன், அரையிறுதியில் தோல்விடைந்ததால் கண்ணீருடன் பேசினார். இருப்பினும் எனக்காக வெண்கலம் வெல்ல வேண்டும் என சிந்துவிடம் கோரினேன். மேலும் சீன வீராங்கனை He Bingjiaoவின் ஆட்ட வீடியோக்களையும் அவருக்கு அனுப்பி வைத்தேன் என்றார் சிந்துவின் தந்தை ரமனா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒலிம்பிக் போட்டித்தொடரை நிறைவு செய்துவிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி டெல்லி திரும்பும் சிந்துவை அவரின் தந்தை நேரில் சென்று விமான நிலையத்தில் சந்திக்க இருக்கிறார். சிந்துவால் அடுத்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்க முடியும் என அவரின் தந்தை ரமனா நம்பிக்கை தெரிவித்தார்.
Published by:Arun
First published: