ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

PV Sindhu | ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து! சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்

PV Sindhu | ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து! சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார் பி.வி.சிந்து..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஒலிம்பிக் பேட்மிண்டனில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில் பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கம் வென்று வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.

டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டைக் கூட இழக்காமல் வீறுநடை போட்டு வந்த இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியிருந்தார். இருப்பினும் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான Tai Tzu-Ying-ஐ எதிர்கொண்டார்.

அரையிறுதிப் போட்டியில் சிந்துவின் கேம் பிளான் எதுவும் சுத்தமாக எடுபடாமல் போனது. அரையிறுதியில் 18-21, 12-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து தோல்வியை தழுவி அதிர்ச்சி தந்தார்.

தோல்வி அடைந்த போதிலும் வெண்கலப் பதக்கத்துக்கான வாய்ப்பு சிந்துவுக்கு இருந்தது. வது இடத்துக்கான மோதல் இன்று (ஆகஸ்ட் ) மாலை மணியளவில் நடைபெற்றது. இதில் சீனாவின் He Bingjiao-வை எதிர்த்து சிந்து மல்லுக்கட்டினார்.

sindhu

முதல் செட்டில் ஆதிக்கத்தை செலுத்திய பி.வி.சிந்து அந்த செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார்.

வழக்கமான தனது ஆக்ரோஷமான ஷாட்டுகளை தன்னம்பிக்கையுடன் அடித்து அமர்க்களப்படுத்தினார். இரண்டாவது செட்டில் லீட் எடுத்திருந்தார். பின்னர் சீன வீராங்கனை ரேலியில் ஈடுபட்டார். ஒவ்வொரு புள்ளியையும் எடுக்க நீண்ட நேரம் பிடித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத்தொடர்ந்து சீன வீராங்கனையை பணிய வைக்கும் வகையில் சில அற்புதமான ஷாட்களை அடித்த பி.வி.சிந்து புள்ளிகள் வித்தியாசத்தை உயர்த்தினார்,

இறுதியில் இரண்டாவது செட்டை 21-15 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை வென்ற சிந்து,  2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்தார் பிவி.சிந்து. சிந்துவின் வெற்றியை இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Badminton, P.V.Sindhu, PV Sindhu, Tokyo Olympics