ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

PV Sindhu | அரையிறுதியில் பி.வி சிந்து அதிர்ச்சித் தோல்வி.. வெண்கல பதக்க வாய்ப்பில் நீடிக்கிறார்!

PV Sindhu | அரையிறுதியில் பி.வி சிந்து அதிர்ச்சித் தோல்வி.. வெண்கல பதக்க வாய்ப்பில் நீடிக்கிறார்!

pv sindhu

pv sindhu

கடைசி கட்டத்தில் சில அட்டகாசமான ஷாட்கள் மூலம் தைவான் வீராங்கனை முதல் செட்டில் வெற்றி பெற்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒலிம்பிக் பேட்மிண்டனின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் தைவான் வீராங்கனையிடம் தோல்வி கண்டார் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.

டோக்யோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டை கூட இழக்காமல் வீறுநடை போட்ட இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, அரையிறுதியில் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான Tai Tzu-Ying-ஐ எதிர்கொண்டார்.

முன்னதாக இருவருக்கும் இடையிலான கடைசி 3 போட்டிகளில் தைவான் வீராங்கனையே வெற்றி பெற்றிருந்த போதிலும் சிந்து மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதே நேரத்தில் 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இதே Tai Tzu-Ying-ஐ சிந்து வீழ்த்தியிருந்தார். எனவே சிந்துவை எப்படியாவது தோற்கடித்து பழிதீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் அவர் ஆக்ரோஷமான விளையாடினார்.

Also Read:  'எலும்பை உடைத்துவிடுவேன்': கட்சியினர் முன் சக எம்.எல்.ஏவை மிரட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ!

எதிர்பார்த்தது போலவே முதல் செட் பரபரப்பாக நகர்ந்தது. இருவருமே மாறி மாறி புள்ளிகளை பெற்று சமநிலையுடன் ஆட்டத்தை நகர்த்தினர். இருப்பினும் கடைசி கட்டத்தில் சில அட்டகாசமான ஷாட்கள் மூலம் தைவான் வீராங்கனை முதல் செட்டில் வெற்றி பெற்றார். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் சிந்து ஒரு செட்டை இழப்பது இதுவே முதல் முறையாக இருந்தது.

இரண்டாவது செட்டின் ஆரம்ப கட்டத்தில் புள்ளிகளை இருவரும் மாறி மாறி எடுத்து சமநிலையுடன் நகர்த்திய போதிலும் ஆட்டத்தின் மத்திய பகுதியில் தைவான் வீராங்கனையின் கையே ஓங்கியது. ஒரு கட்டத்தில் 7-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து பின் தங்கியிருந்தார்.

Also Read:  8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த காட்டு வேட்டை நாய் இனத்தின் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிப்பு!

கிடைத்த இந்த புள்ளிகள் வித்தியாசத்தை கடைசி வரை பராமரித்த தைவான் வீராங்கனை இரண்டாவது செட்டையும் தனதாக்கி, நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் 18-21, 12-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார்.

sindhu

கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, இம்முறை எப்படியும் தங்கப்பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் சிந்து தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ்-ஐ சிந்து எதிர்கொள்வார். இந்தப் போட்டி நாளை (ஆகஸ்ட் ) மாலை  மணிக்கு நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சென் யு ஃபெய்யை சக நாட்டு வீராங்கனையான ஹெ பிங் ஜியாவ் எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 21-16; 13-21; 21-12 என்ற செட் கணக்கில் சென் யு ஃபெய் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

Published by:Arun
First published:

Tags: Olympic 2020, P.V.Sindhu, PV Sindhu, Tokyo Olympics