டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் பி.வி.சிந்து; ஜப்பான் வீராங்கனையை நொறுக்கினார்

டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் அபார வெற்றி பெற்று பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் அபார வெற்றி பெற்று பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியை 21-13, 22-20 என்ற நேர் செட்களில் வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    இது நெருக்கமான போட்டி. இரண்டாவது செட்டில் யாமகுச்சி நிச்சயம் ஆட்டத்தின் போக்கை மாற்றியிருப்பார். ஆனால் பி.வி.சிந்து அவரை விடவில்லை. இரண்டாவது செட்டை 22-20 என்று கைப்பற்றி யாமகுச்சியை 2-0 என்று வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இந்த ஆட்டம் 56 நிமிடங்கள் நடைபெற்றது. முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டில் முதலில் 3-3 என்று யாமகுச்சி டஃப் கொடுத்தார், ஆனால் யாமகுச்சி தவறாக வெளியே ஒரு ஷாட்டை அடிக்க சிந்து 5-3 என்று முன்னிலை வகித்தார்.

    அடுத்த 5 புள்ளிகளை சிந்து அபாரமாக ஆடி பெற்றதில் யாமகுச்சி 2ஐத்தான் வெல்ல முடிந்தது இதனால் 10-5 என்று சிந்து முன்னிலை பெற்றார். அடுத்த 5 கேமில் சிந்து வெல்ல யாமகுச்சி 3-ல் வென்றார், இதனையடுத்து ஆட்டம் 14-8 என்று இருந்தது.

    ஆனால் இந்த நிலையில் யாமகுச்சி பிரமாதமாக ஆடி சவால் அளித்தார், சிந்து ஒரு புள்ளியை மட்டும் பெற யாமகுச்சி 6 புள்ளிகளை வெல்ல ஆட்டம் 15-14 என்று சிந்துவுக்கு அச்சுறுத்தலானது.

    பிறகும் யாமக்குச்சி சிந்துவிடமிருந்து ஆட்டத்தை பறிமுதல் செய்யுமாறு ஆடி ஒரு புள்ளி முன்னிலை பெற்றார். 19-18 என்ற நிலையில் ஒரு ஸ்மாஷ் ஷாட் ஆடி சிந்து 19-20 என்று ஆனார். மீண்டும் ஒரு பிரமாதமான டவுன் த லைன் ஸ்மாஷ் ஆட 20-20 என்று சமன் ஆனது. பிறகு சிந்து 2 கேம் பாயிண்டுகளை சேவ் செய்து நின்றார். பிறகு 21-20 என்று மேட்ச் பாயிண்டுக்கு வந்தார் சிந்து 22-20 என்று விடாப்படியாக நின்று ஜெயித்தார்.
    Published by:Muthukumar
    First published: