ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா!

பி.டி.உஷா

பி.டி.உஷா

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்து இருந்தார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என பதிவிட்டு இருந்தார்.

மேலும் துணைத் தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 24 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி உஷாவை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யததால் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாக இருக்கிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றுள்ளார்.

First published:

Tags: Olympic Council