முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி சீசன் 8 : லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான், தபாங் டெல்லி அணிகள் வெற்றி

புரோ கபடி சீசன் 8 : லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான், தபாங் டெல்லி அணிகள் வெற்றி

ஆட்டத்தின் பகுதி நேர இடைவேளையின்போது புனே 19 புள்ளிகளையும், குஜராத் 13 புள்ளிகளையும் எடுத்திருந்தது. இரண்டாவது பாதியிலும் புனே அணியின் அதிரடி தொடர்ந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புரோ கபடி சீசன் 8 கபடி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் மற்றும் தபாங் டெல்லி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக புரோ கபடி சீசன் 8 போட்டிகள் பெங்களூருவில் உள்ளரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று 34 மற்றும் 35வது லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.

இதில் புனேரி பல்தான் அணியின் இளம் வீரர் மோகித் காயத் மற்றும் அஸ்லம் இனாம்தார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியான குஜராத் ஜெயன்ட்சை திணறடித்தனர். இதனால் ஆரம்பம் முதலே புனே அணியின் கை ஓங்கிக் காணப்பட்டது.

ஆட்டத்தின் பகுதி நேர இடைவேளையின்போது புனே 19 புள்ளிகளையும், குஜராத் 13 புள்ளிகளையும் எடுத்திருந்தது. இரண்டாவது பாதியிலும் புனே அணியின் அதிரடி தொடர்ந்தது. ஆட்ட நேர முடிவில் 33-26 என்ற புள்ளி கணக்கில் புனே அணி வெற்றி பெற்றது.

மற்றொரு லீக் ஆட்டத்தில், தபாங் டெல்லி அணி தெலுங்கு டைட்டன்சை எதிர் கொண்டது. இரு அணிகளும் சம பலம் கொண்டவை என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இறுதியில் 36-35 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.

நாளை நடைபெறவுள்ள 36 வது லீக் போட்டியில் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது. 37-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் உடன் மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களும் முறையே இரவு 7.30 மற்றும் 8.30-க்கு நடைபெறுகின்றன.

First published:

Tags: Pro Kabaddi