ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ப்ரோ கபடி லீக் : உ.பி. யோத்தாவை வென்றது தமிழ் தலைவாஸ்

ப்ரோ கபடி லீக் : உ.பி. யோத்தாவை வென்றது தமிழ் தலைவாஸ்

யோத்தா தனது அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வரும் 8-ம்தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30-க்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ப்ரோ கபடி லீக்கின் விறுவிறுப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி. யோத்தாவை 39-33 என்ற கணக்கில் வென்றது. யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் இடையே நடந்த மற்றொரு ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

ப்ரோ கபடி லீக்கின் 8வது சீசன் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி. யோத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியின்போதே, தமிழ் தலைவாசின் கை ஓங்கி காணப்பட்டது.

பகுதிநேர முடிவில் தமிழ் தலைவாஸ் 21 புள்ளிகளையும், யோத்தா 10 புள்ளிகளையும் பெற்றிருந்தன. இரண்டாவது பகுதி ஆட்டத்தில் யோத்தா அணி வீரர்கள் மிரட்டலாக விளையாடி புள்ளிகளை பெற்றனர். இருப்பினும் அந்த அணியால் 33 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. 39 புள்ளிகளைப் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உ.பி. யோத்தா அணியின் சுரேந்தர் கல் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் மட்டுமே தனியொருவனாக 14 புள்ளிகளை அணிக்கு பெற்றுத் தந்தார். யோத்தா தனது அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வரும் 8-ம்தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30-க்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணி அரியானா ஸ்டீலர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் எதிர் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். கபடி ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த ஆட்டம் 24-24 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

முதல் பாதியில் மும்பா 10 புள்ளிகளும், ஸ்டீலர்ஸ் 12 புள்ளிகளும் பெற்றிருந்தன. இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடிய யு மும்பா அணியினர் ஆட்டத்தை டிராவில் முடித்தனர்.

புரோ கபடி லீக் போட்டிகளிலேயே மிகக்குறைந்த புள்ளிகளைப் பெற்ற ஆட்டமாக யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ்க்கு இடையிலான ஆட்டம் கருதப்படுகிறது.

First published:

Tags: Pro Kabaddi