ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Pro Kabaddi League - புரோ கபடி லீக்- இன்றைய போட்டிகள்

Pro Kabaddi League - புரோ கபடி லீக்- இன்றைய போட்டிகள்

புரோ கபடி லீக் இன்றைய போட்டிகள்

புரோ கபடி லீக் இன்றைய போட்டிகள்

இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புரோ கபடி லீக் 2021 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

முதல் நாளான நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி (யு மும்பா) 46-30 புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அரங்கேறிய 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டி 40-40 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் தீபக் நிவாஸ் தலைமையிலான ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. அதை தெடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜோகிந்தர் நர்வால் தலைமயிலான டெல்லி அணி - புனே அணியை எதிர்கொள்கிறது.

இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பலம் வாய்ந்த பாட்னா அணியை ஹரியானா அணி எதிர்கொள்கிறது.

இந்தியாவில் புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) தொடரின் 8வது சீசன் நேற்று பெங்களூருவில் துவங்கியது. 'நடப்பு சாம்பியன்' பெங்கால், தமிழ் தலைவாஸ், பெங்களூரு, மும்பை உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.

டெல்லி அணி : நவீன் குமார், அஜய் தாக்கூர், ஜொகீந்தர் நர்வால், ஜீவா குமார், மஞ்ஜித் சில்லார், நீரஜ் நர்வால், பல்ராம்

புனே அணி: ராகுல் சவுத்ரி, நிதின் தோமர், பங்கஜ் மோஹிட், விசால் பரத்வாஜ், பல்தேவ் சிங், ஹாதி தாஜிக், சோம்பீர்.

First published:

Tags: Pro Kabaddi