ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ப்ரோ கபடி லீக் சீசன் 8 : இன்றைய ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் வெற்றி

ப்ரோ கபடி லீக் சீசன் 8 : இன்றைய ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் வெற்றி

கேப்டன் தீபக் ஹூடா பெஞ்ச்சில் வைக்கப்பட்டு அவருக்கு பதிலாக சந்தீப் துல் களத்தில் இறக்கப்பட்டிருந்தார். புனே அணியின் மோகித் கோயாத், பங்கஜ் மோகித் ஆகியோரின் ரைடுகளை சந்தீப் துல் அசால்ட்டடாக எதிர்கொண்டு பாராட்டுக்களைப் பெற்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பெங்களூருவில் நடைபெற்று வரும் ப்ரோ கபடி லீக் சீசன் 8- ன் இன்றைய ஆட்டத்தில், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

  கபடி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வரும் ப்ரோ கபடி லீக் சீசன் 8 போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதியின்றி போட்டிகள் உள்ளரங்களில் நடத்தப்படுகின்றன.

  இதையும் படிங்க : இனி டி20 பேட்ஸ்மென்களுக்கு ஜாக்பாட்தான் - ஐசிசியின் புதிய அதிரடி டி20 விதிமுறை அறிமுகம்

  இன்று நடைபெற்ற லீக் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதியால் ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 41-37 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வென்றது.

  இதையும் படிங்க : கோலி வந்தா என்னப்பா? அதுக்கு இவரைத்தான் நீக்கணுமா பாவம்- கம்பீர் காட்டம்

  ஆட்டத்தின் தொடக்கத்தில் பெங்கால் அணியின் கையே ஓங்கியிருந்தது. அப்போது அரியானாவின் இளம் வீரர்கள் மீத்து மற்றும் மனிந்தர் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றி பெறச் செய்தனர்.

  அடுத்ததாக நடைபெற்ற ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி, புனேரி பல்தானை எதிர்கொண்டது. இதில் 31-26 என்ற கணக்கில் பிங்க் பேந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் ஜெய்ப்பூர் அணியின் தேஷ்வால் சிறப்பாக ரைடு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

  இதையும் படிங்க : IND vs SA| வெற்றிக்காக என் உடம்பு ரணகளம் ஆனது, மற்றவர்களும் இப்படி ஆட வேண்டும்- டீன் எல்கர்

  கேப்டன் தீபக் ஹூடா பெஞ்ச்சில் வைக்கப்பட்டு அவருக்கு பதிலாக சந்தீப் துல் களத்தில் இறக்கப்பட்டிருந்தார். புனே அணியின் மோகித் கோயாத், பங்கஜ் மோகித் ஆகியோரின் ரைடுகளை சந்தீப் துல் அசால்ட்டடாக எதிர்கொண்டு பாராட்டுக்களைப் பெற்றார்.

  நாளை நடைபெறவுள்ள ஆட்டங்களில் யு.பி. யோத்தா தபாங் டெல்லியையும், யு மும்பா தெலுங்கு டைட்டன்சையும், குஜராத் ஜெயன்ட்ஸ் பாட்னா பைரேட்சையும் எதிர்கொள்கின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Pro Kabaddi