இந்தியாவில் நிலவிய கொரோனா தொற்று பரவலால் புரோ கபடி லீக் (பி.கே.எல்) போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இந்தாண்டு இறுதியில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12 அணிகள் பங்கேற்கவுள்ள புரோ கபடி லீக்கின் 8வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஆகஸ்ட் மாத இறுதியில் மும்பையில் நடந்தது. வீரர்களை ஏலத்தில் ஏலத்தில் பங்கேற்ற அணிகள் அனைத்தும் அணிகளும் தங்களுக்கான வீரர்களை ஆவர்வமாக வாங்கிக் குவித்தன. இதில், தமிழ் தலைவாஸ் அணி 7 புதிய வீரர்களை வாங்கியது. இதில் பி பிரிவு ரைடர் எம்எஸ் அதுல் என்ற வீரரை ரூ .30 லட்சத்திற்கு வாங்கியது.
கேரளாவைச் சேர்ந்த அதுல், ஏலப் பட்டியலில் பி பிரிவு ரைடர் உள்ளார். இவர் முன்பு லீக்கின் ஆறாவது பதிப்பில் தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்று இருந்தார்.
இந்த ஏலத்தில் சி பிரிவு ரைடர் அஜிங்க்யா பவார் ரூ .19.5 லட்சத்திற்கும், சி பிரிவு ஆல்-ரவுண்டர் சவுரப் பாட்டீல் ரூ .15 லட்சத்திற்கும் தமிழ் தலைவாஸ் அணியால் வாங்கப்பட்டனர். தவிர, அந்த அணி மேலும் நான்கு வீரர்களை 10 லட்சம் கொடுத்து வாங்கியது. சந்தபனசெல்வம் ( சி பிரிவு ஆல்-ரவுண்டர்), சாகர் கிருஷ்ணா (சி பிரிவு ஆல்-ரவுண்டர்), சாஹில் (சி பிரிவு டிபெண்டர்), மற்றும் பவானி ராஜ்புத் (சி பிரிவு ரைடர்) போன்றோர் ஆவார்.
Also Read: விவோ ப்ரோ கபடி சீசன் 8 : எப்போது தொடங்குகிறது, எதில் பார்க்கலாம்? முழு விபரம்
Also Read: PRO Kabaddi Season 8 : ப்ரோ கபடி 2021 போட்டிகளுக்கான அட்டவணை
தமிழ் தலைவாஸ் அணி விவரம்:
அஜிங்கிய பவார்
எம்.எஸ்.அதுல்
பவானி ராஜ்புத்
கே.பிரபஞ்சன்
ராகுல் சவுதாரி
மஞ்சீத் சில்லர்
ரான் சிங்
சந்தருவான் அசிரி
எம்.அபிஷேக்
சுர்ஜீத் சிங்
ஹிமான்ஷு
சாகர்
சாஹில்
அன்வர்
சாகர் கிருஷ்ணா,
சந்தப்பன செல்வம்,
சவுரவ் பாட்டீல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pro Kabaddi