முகப்பு /செய்தி /விளையாட்டு / Pro Kabaddi League- புள்ளிகள் பட்டியல்- பாட்னா, குஜராத் அணிகள் அபார வெற்றி

Pro Kabaddi League- புள்ளிகள் பட்டியல்- பாட்னா, குஜராத் அணிகள் அபார வெற்றி

புரோ கபடிலீக் 2021-22, புள்ளிகள் பட்டியல்

புரோ கபடிலீக் 2021-22, புள்ளிகள் பட்டியல்

புரோ கபடி லீக் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு லீக் ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் அணியும், குஜராத் அணியும் அபார வெற்றி பெற்றது.

  • Last Updated :

புரோ கபடி லீக் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு லீக் ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் அணியும், குஜராத் அணியும் அபார வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாட்னா அணி அபாரமாக ஆடியது. இறுதியில், பாட்னா பைரேட்ஸ் 43 - 23 என்ற புள்ளிக்கணக்கில் வென்று ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 40 - 22 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணி பெறும் 2-வது வெற்றி ஆகும்.

புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 6 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என மொத்தம் 34 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.

புள்ளிகள் பட்டியல் இதோ:

1. பாட்னா பைரேட்ஸ் - விளையாடியது 8 வெற்றி பெற்றது 6, தோல்வி 1 புள்ளிகள் 34

2. பெங்களூரு புல்ஸ், ஆடியது 6, வென்றது 5, தோல்வி 2, புள்ளிகள் 33

3. தபங் டெல்லி கே.சி. 8போட்டிகளில் ஆடி 5-ல் வென்று 32 புள்ளிகள்

4. தமிழ் தலைவாஸ் 8-ல் ஆடி 3-ல் வென்று ஒன்றில் தோற்று 4-ல் டை செய்து 27 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

5. யு.மும்பா அணி 8-ல் ஆடி 3-ல் வென்று 2ல் தோற்று 3 டை செய்து 25 புள்ளிகள் பெற்றுள்ளது.

ஜெய்பூர் அணி 23 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும், குஜராத் அணி 20 புள்லிகளுடன் 7ம் இடத்திலும் ஹரியாணா அணி 20 புள்ளிகளுடன் 8ம் இடத்திலும் இருக்க முந்தைய சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் 17 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.

top videos

    இந்தப் பட்டியலில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஒரு வெற்றியைக் கூட 8 ஆட்டங்களில் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி இடத்தில் உள்ளது

    First published:

    Tags: Pro Kabaddi, Tamil Thalaivas