முகப்பு /செய்தி /விளையாட்டு / Pro Kabaddi 2021: இன்று புரோ கபடி லீக் தொடக்கம்: கடந்த ஆண்டின் மோசமான ஆட்டத்திலிருந்து மீளுமா தமிழ் தலைவாஸ்?

Pro Kabaddi 2021: இன்று புரோ கபடி லீக் தொடக்கம்: கடந்த ஆண்டின் மோசமான ஆட்டத்திலிருந்து மீளுமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி 8வது தொடர் இன்று ஆரம்பம்.

புரோ கபடி 8வது தொடர் இன்று ஆரம்பம்.

  • Last Updated :

புரோ கபடி லீக் தொடர் இன்று துவங்குகிறது இதில் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி சந்திக்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 8:30 மணிக்கு நடைபெறுகிறது. இடம்: பெங்களூரு.

இன்று மூன்று போட்டிகள் நடக்கவுள்ளன. முதல் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. மற்ற இரு போட்டிகளில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (ஐதராபாத்), பெங்கால்-உ.பி., அணிகள் விளையாடுகின்றன.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) 8வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' பெங்கால், தமிழ் தலைவாஸ், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. 12 அணிகளில் இருந்து, 190க்கும் மேற்பட்ட வீரர்கள் ரூ. 48.22 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உ.பி., அணி சார்பில் நார்வல், அதிகபட்சமாக ரூ. 1.65 கோடிக்கு ஒப்பந்தமானார்.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அடுத்த நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இன்று மோதும் தமிழ்தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இரண்டுமே கடந்த முறை மோசமாக ஆடின. தெலுங்கு டைட்டன்ஸ் அணி கடந்த புரோ கபடி லீக் போட்டிகளில் 11வது இடத்தில் முடிந்தது. 6-ல் வென்று 13-ல் தோற்றது. தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 15 தோல்விகள் என்று பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.

எனவே இரு அணிகளுமே வெற்றியுடன் தொடங்க நிச்சயம் கடுமையாகப் போராடி ஆடும். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் ரோகித் குமார் மற்றும் பாகுபலி சித்தார்த் ஏறி விளையாடும் ரெய்டர்களில் ஆக்ரோஷமானவர்கள்.

தெலுங்கு டைட்டன்ஸ் விளையாடும் 7 வீரர்கள்: சித்தார்த் தேசாய், ரோகித் குமார், ரஜ்னீஷ், அமித் சவுகான், சி.அருண், சுரீந்தர் சிங், ருதுராஜ் கொராவி

தமிழ் தலைவாஸ் அணி: கே.பிரபஞ்சன், அதுல் எம்.எஸ், மஞ்ஜீத், சாகர் பி கிருஷ்ணா, சந்தபனசெல்வம், சுர்ஜீத் சிங், எம்.அபிஷேக் சாகர்

top videos

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் லைவ் ஆக இந்தப் போட்டிகள் ஒளிபரப்பப்படுகிறது.

    First published:

    Tags: Pro Kabaddi