முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி லீக்: முதல் வெற்றி ஈட்டுமா தமிழ் தலைவாஸ்? - இன்று யு-மும்பாவுடன் மோதல்

புரோ கபடி லீக்: முதல் வெற்றி ஈட்டுமா தமிழ் தலைவாஸ்? - இன்று யு-மும்பாவுடன் மோதல்

தமிழ் தலைவாஸ்-யு மும்பா இன்று மோதல்

தமிழ் தலைவாஸ்-யு மும்பா இன்று மோதல்

புரோ கபடி லீக் 2021-22-ல் இன்றைய 15வது போட்டியில் தமிழ்நாடு அணி யு-மும்பா அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டியிலாவது தமிழ்நாடு அணி வென்று தன் முதல் வெற்றியைச் சாதிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • Last Updated :

புரோ கபடி லீக் 2021-22-ல் இன்றைய 15வது போட்டியில் தமிழ்நாடு அணி யு-மும்பா அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டியிலாவது தமிழ்நாடு அணி வென்று தன் முதல் வெற்றியைச் சாதிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மாறாக யு-மும்பா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் களம் காண்கிறது. பெங்களூரு புல்ஸ் அணியை 46-30 என்று பதம் பார்த்த யு-மும்பா அடுத்ததாக  27-31 என்று டெல்லியிடம் நெருக்கமான தோல்வியைத் தழுவியது. மாறாக தமிழ் தலைவாஸ் இன்னும் முதல் வெற்றியையே பெறவில்லை முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸுடன் 40-40 என்று த்ரில் டை செய்தது. பெங்களூரு புல்ஸ் அணியிடம் 2வது போட்டியில் 30-38 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் யு-மும்பாவுடனான தமிழ் தலைவாஸ் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் நடைபெறுகிறது. தமிழ் தலைவாஸ் அணியில் பவானி ராஜ்புத் இதுவரை சிறந்த ரெய்டராக 8 புள்ளிகளைப் பெற்றுள்ளார். கே.பிரபஞ்சன், மஞ்சீத் சொதப்பி வருகின்றனர். தடுப்பாட்டத்தில் சாகரும் சுர்ஜீத்தும் சிறந்து விளங்குகின்றனர்.

தமிழ் தலைவாஸ் அணி: கே.பிரபஞ்சன், சுர்ஜீத் சிங், மோஹித், மஞ்சீத், பவானி ராஜ்புத், சாகர், சாஹில் சிங்.

யு-மும்பா அணி: அபிஷேக் சிங், ஆஷிஷ் சங்வான், ஹரேந்திர குமார், மோசென் மக்சோட்லூ, வி. அஜித், ரிங்கு அல்லது ஷிவம், பாசல் அட்ராசலி.

இதையும் படிங்க: Vijay Hazare: கேட்சை விட்டு, பீல்டிங்கில் கோட்டை விட்டு கோப்பையை நழுவ விட்ட தமிழ்நாடு அணி

 தமிழ் தலைவாஸ் அணி தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்குகையில் தாக்குதல் ஆட்டத்தில் ஒன்றுமில்லாமல் இருக்கிறது. பிரபஞ்சன், மஞ்சித் அபாயகரமான தாக்குதல் வீரர்கள் என்றாலும் இதுவரை அவர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை.

இந்தப் போட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது.

top videos

    First published:

    Tags: Pro Kabaddi, Tamil Thalaivas