ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

PKL 2021-22|புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை கவிழ்த்த மும்பையின் தமிழக வீரர்- ஆட்டம் டை

PKL 2021-22|புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை கவிழ்த்த மும்பையின் தமிழக வீரர்- ஆட்டம் டை

mumbai -thalaivas

mumbai -thalaivas

புரோ கபடி லீக் 2021-22 எட்டாவது தொடரில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி இடைவேளைக்கு முன்னர் கொண்டிருந்த முன்னிலையை சொதப்பலாக இழந்து யு-மும்பா அணியுடன் டை செய்தது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புரோ கபடி லீக் 2021-22 எட்டாவது தொடரில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி இடைவேளைக்கு முன்னர் கொண்டிருந்த முன்னிலையை சொதப்பலாக இழந்து யு-மும்பா அணியுடன் டை செய்தது.

பெங்களூருவில் நடைபெறும் புரோ கபடி லீக் போட்டிகளில் நடப்பு சாம்பியன் பெங்கால் உட்பட 12 அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் பாணியிலேயே ஒவ்வொரு அணியும் மற்ற அணிக்கு எதிராக இருமுறை மோதி கடைசியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குச் செல்ல இன்னும் 2 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் ஆடி தகுதி பெறும்.

இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத தமிழ் தலைவாஸ் அணி நேற்று மும்பையை சந்தித்தது, பிரமாதமாகத் தொடங்கி மும்பையை தொடக்கத்திலேயே ஆல் அவுட் செய்து  12-3 என்று முன்னிலை பெற்றது.  ஆனால் மும்பை அணியில் ஆடும் தமிழக வீரர் அஜித் குமார் திடீரென பெரிய ரெய்டு ஒன்றை ஆட ஒரே ரெய்டில் 4 புள்ளிகளை மும்பா அணிக்குப் பெற்றுத்தந்தார்.

தமிழ் தலைவாஸ் அணியும் ஆல் அவுட் ஆக 17-14 என்று. தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றிருந்தாலும் மும்பை நெருங்கி வந்தது.

2வது பாதியில் பவானி 2 புள்ளிகளைத் தமிழ் தலைவாஸ் அணிக்கு பெற்றுத் தர, மும்பையின் தமிழக வீரர் அஜித் குமார் மேலும் ரெய்டில் தமிழ் தலைவாஸ் வீரர்களுக்கு குடைச்சலைக் கொடுத்து புள்ளிகளைச் சேகரிக்க தமிழ் தலைவாஸ் மீண்டும் ஆல் அவுட் ஆனது. கடைசியில் எப்படியோ 26-27 என்று நெருங்கி வந்தது தமிழ் தலைவாஸ்,

ஆட்டம் 29-30 என்று சென்ற போது, மும்பா அணியின் குடைச்சல் வீரர் அஜித் குமாரை அப்படியே அலேக் என்று பிடித்துப் போட ஆட்டம் 30-30 என்று டை ஆனது.

மும்பை வீரர் அஜித் குமார் 15 புள்ளிகளை எடுத்து அசத்த, தமிழ் தலைவாஸ் அணி இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் 2 டை, ஒரு தோல்வி என்று 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 13 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க பெங்கால் வாரியர்ச் 11 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்துள்ளது. ஜெய்ப்பூர் பிங்க் பேந்த்தர்ஸ் அணியும் 11 புள்ளிகள் பெற்றாலும் 3ம் இடத்தில் உள்ளது. பெங்களூரு புல்ஸ் 10 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

மற்றொரு புரோ கபடி ஆட்டத்தில் ஜெய்பூர் பிங்க் பேந்த்தர்ஸ் அணி உ. பி. அணியை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

First published:

Tags: Pro Kabaddi