முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி லீக் 2021: சாம்பியன் பெங்காலை ஊதியது டெல்லி அணி

புரோ கபடி லீக் 2021: சாம்பியன் பெங்காலை ஊதியது டெல்லி அணி

புரோ கபடி லீக் 2021

புரோ கபடி லீக் 2021

  • Last Updated :

புரோ கபடி லீக் 2021-22 -8வது தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் அணியை தபாங் டெல்லி அணி ஊதித்தள்ளியது.

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 52-35 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்சை பந்தாடியது. ரைடு செல்வதில் கில்லாடியான டெல்லி வீரர் நவீன்குமார் 24 புள்ளிகளை குவித்து பிரமாதப்படுத்தினார். ஒரு ஆட்டத்தில் அவர் எடுத்த அதிக புள்ளிகள் இது தான். புள்ளி பட்டியலில் தபாங் டெல்லி அணி 3 வெற்றி, ஒரு ‘டை’ என்று 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

உ.பி.யோத்தா- குஜராத் ஜெயன்ட்ஸ் இடையிலான மற்றொரு பரபரப்பான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இன்றைய லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-யு மும்பா இரவு 7.30 மணிக்கும் ஹரியானா ஸ்டீலர்ஸ்- பெங்களூரு புல்ஸ் இரவு 8.30 மணிக்கும் சந்திக்கின்றன.

புரோ கபடி லீக் புள்ளிகள் பட்டியலில் 4 போட்டிகளில் 3-ல் வென்று டெல்லி தபாங் அணி 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 23ம் இடத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் குஜராஜ் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி 12 புள்ளிகளுடன் உள்ளது.

3ம் இடத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 11 புள்ளிகளுடனும் இதே 11 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியும் உள்ளது. நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் அணியும் 11 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் இருக்கிறது.

Also Read: மும்பையில் கொரோனா பாதிப்புகள் ஒரே நாளில் 82 சதவீதம் அதிகரிப்பு... முதல்வர் அவசர ஆலோசனை

 பெங்களூரு புல்ஸ், உத்தரப்பிரதேச யோத்தா அணிகள் 6 மற்றும் 7ம் இடங்களில் உள்ளன. யு-மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ், தமிழ்தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பல்டன் அணிகள் முறையே 8,9, 10, 11, மற்றும் 12ம் இடங்களில் உள்ளன.

First published:

Tags: Pro Kabaddi