ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாறு.. ஒவ்வொரு கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு - விலையை கேட்டால் தலைச்சுற்றி போவீங்க

அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாறு.. ஒவ்வொரு கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு - விலையை கேட்டால் தலைச்சுற்றி போவீங்க

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாறு படைத்த சவுதி அரேபியாவுக்கு வழங்கும் மதிப்புமிக்க பரிசு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்திய சவுதி அரேபியா அணி வீரர்களுக்கு விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கப்படும் என அந்த நாட்டு இளவரசர் அறிவித்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்று வரும் 2022 FIFA உலகக் கோப்பையில் தொடரில் லீக் சுற்று போட்டியில் தங்களது முதல் போட்டியில் சவுதி அரேபியா மற்றும் வலுவான அர்ஜெண்டினா அணிகள் மோதின. இதில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. முதன் முறையாக அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி கோல் அடித்து தோல்வி அடைந்த முதல் போட்டி என்ற பெருமையும் இந்த போட்டி பெற்றது.

இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் விதமாக சவுதி அரேபியாவில் ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்தும் அந்த நாடே கொண்டாடியது. இந்த நிலையில் சவுதி அரேபியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதி அரேபியா அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் இந்திய மதிப்பில் ரூ.8.99 கோடி முதல் ரூ.10.28 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 5 உலக கோப்பைகள்.. யாரும் செய்யாதது.. கெத்து காட்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

காரின் சிறப்பு அம்சம் என்ன?

ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் சீரிஸ் II இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 563 ஹெச்பி மற்றும் 900 என்எம் டார்க்கை வழங்கும் அதே 6.75 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் வி12 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதே ZF ஆறு வேக தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-60 mph வேகத்தை 5.5 வினாடிகளில் அடையும். 2745 கிலோ எடையைக் கொண்டதாகும்.

First published:

Tags: Argentina, FIFA World Cup 2022, Qatar, Saudi Arabia