Home /News /sports /

‘யங் ஜீனியஸ்’- 16 வயது செஸ் நட்சத்திரம் பிரக்யானந்தாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

‘யங் ஜீனியஸ்’- 16 வயது செஸ் நட்சத்திரம் பிரக்யானந்தாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி- பிரக்யானந்தா.

பிரதமர் மோடி- பிரக்யானந்தா.

“இளம் மேதை ஆர் பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்.

    ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா வீழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார், இதற்காக பிரதமர் மோடி பிரக்யானந்தாவை பாராட்டியுள்ளார்.

    சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தரப்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றுள்ளார்.

    ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா, 2 போட்டிகளை டிரா செய்தார். மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன.

    இந்நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் கருப்பு காய்களை தேர்வு செய்து பிரக்யானந்தா விளையாடினார்.

    ஆட்டத்தின் 39வது நகர்வின்போது, மேக்னஸ் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை, சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவர் தோற்கடித்திருப்பது சர்வதேச அளவில் அனைவரையும் மூக்கில் மேல் விரல் வைக்கச் செய்து யாருப்பா இந்த பிரக்யானந்தா என்று தேட வைத்தது.

    இதற்கு முன்பாக மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் தோற்கடித்துள்ளனர். ஆனாலும் இத்தனை சிறிய வயதில் கார்ல்சன் போன்ற அனுபவஸ்தரை வீழ்த்துவது சாதாரண சாதனையல்ல.

    இதைத்தான் பிரதமர் மோடி தன் ட்விட்டரில் நெகிழ்ச்சி ததும்ப பாராட்டியுள்ளார்:



    “இளம் மேதை ஆர் பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். புகழ்பெற்ற சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் வெற்றி பெற்றது குறித்து பெருமையடைகிறோம். திறமையான பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.”
    Published by:Muthukumar
    First published:

    Tags: Prime Minister Narendra Modi, Sports, Sports Player

    அடுத்த செய்தி