Home /News /sports /

‘வெற்றியை பெரிதாகக் கொண்டாட மாட்டார் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி விட்டு உடனே தூங்கப் போய்விட்டார்’- மகனைப் பற்றி தந்தை

‘வெற்றியை பெரிதாகக் கொண்டாட மாட்டார் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி விட்டு உடனே தூங்கப் போய்விட்டார்’- மகனைப் பற்றி தந்தை

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

செஸ்ஸபிள் செஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சீன வீரரை ஒரு கட்டத்தில் திக்குமுக்காடச் செய்த சென்னையை சேர்ந்த யங் செஸ் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பொதுவாக வெற்றிகளை ஆ.. ஊ... என்றெல்லாம் கொண்டாடும் பழக்கமில்லாதவராம், மேதை கார்ல்சனை வீழ்த்தி விட்டு பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லாமல் உடனே தூங்கப்போய்விட்டாராம் பிரக்ஞானந்தா, இதனை அவரது தந்தை ரமேஷ் பாபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...

    “எங்களைப் பொறுத்தவரை அவர் இன்னமும் குழந்தைதான். சில வேளைகளில் குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவான். அவன் அம்மாதான் அவனுக்கு லஞ்ச் பேக் செய்து கொடுக்கிறார். சில சமயங்களில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு பறந்து விடுவான். கார்ட்டூன்கள் பார்க்கும் பழக்கமில்லை, ஆனால் நியூஸ் மற்றும் காமெடி சேனல்கள் பார்க்கும் பழக்கமுண்டு.

    குழந்தைத்தனம் இருந்தாலும் தொடர்ந்து கடினமாக உழைத்தால்தான் செஸ்சில் முன்னேற்றம் அடைய முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறான். மன உறுதியும் வேட்கையும் அதிகம் உண்டு. பள்ளித்தேர்வு அழுத்தம் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் செஸ் ஆட்டத்திற்காக 6-8 மணி நேரம் ஒதுக்குகிறான், பலதரப்பட்ட செஸ் வீரர்களின் செஸ் ஆட்ட டேப்களைப் பார்க்கிறான், காய்கள் எந்த பொசிஷனில் இருக்கின்றன, அங்கிருந்து எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கிறான்” என்று ஆங்கிலல் ஊடகம் ஒன்றிற்கு அவர் தந்தை கூறியுள்ளார்.

    மேலும் வெற்றி தோல்வி இரண்டையும் சரிசமமாகவே பாவிக்கிறார் பிரக்ஞானந்தா என்கிறார் அவர் தந்தை, “முதன் முதலில் கார்ல்சனை வீழ்த்திய போது அவன் சந்தோஷத்தில் குதிக்கவில்லை. கார்ல்சனை தோற்கடித்து விட்டேன் என்று கேஷுவலாக எங்களிடம் கூறிவிட்டு உடனே தூங்கப்போய்விட்டான்.

    பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் பெயரும் ரமேஷ் தான் அவர் முக்கியமான ஒன்றை குறிப்பிட்டார், அதாவது கிரிக்கெட்டில் சேவாக் பற்றி கூறும்போதெல்லாம் பந்தைப் பார் அடி என்ற அணுகுமுறை, எதிரணி யார், யார் பவுலர், சூழ்நிலை என்ன என்பதெல்லாம் கணக்கில்லை என்பார்களே அதே போல்தன பிரக்ஞானந்தாவுக்கும் என்கிறார்.

    எதிரில் இருப்பது கார்ல்செனா அல்லது வேறு யாரா என்பதெல்லா தெரியாது, போர்டில் இருக்கும் காய்களின் நிலைகளுக்குத்தான் பிரக்ஞானந்தா ரியாக்ட் செய்வார். கார்ல்செனை இருமுறை தோற்கடிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல.

    வெகு விரைவில் தோற்கடிக்கவே முடியாத ஒரு உலக சாம்பியனாக பிரக்ஞானந்தா உருவாகிவிடுவார் என்று செஸ் பண்டிதர்கள் இவர் மீது கடும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது நடக்கும் என்றுதான் அவரது திறமை நமக்கும் கூறுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chess, Praggnanandhaa

    அடுத்த செய்தி