போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபெர்னாண்டோ சான்டோஸ் பதவி விலகியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில், மொரோக்கோ அணிக்கு எதிராக போர்ச்சுக்கல் தோல்வியடைந்தது இந்நிலையில் இந்த ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து போர்ச்சுக்கல் அணியின் முதன்மை பயிற்சியாளராக இருந்த சான்டோஸ், அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித் தந்துள்ளார். இருப்பினும் ரொனால்டோவுக்கு எதிராக அவர் நடவடிக்கை மேற்கொண்டதாக சர்ச்சைகள் எழுந்தன.
குறிப்பாக மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்ட ரொனால்டோ ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில்தான் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
WATCH - மனம் உருகி புகழ்ந்த நிருபர்.. அழுகை தொண்டையை அடைக்க நெகிழ்ந்து நின்ற மெஸ்ஸி!
உலகக்கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் வெளியேறியதற்கு பயிற்சியாளர் ஃபெர்னான்டோ சான்டோஸ்தான் காரணம் என்று சர்ச்சைகள் வெடித்தன. அதிலும் குறிப்பாக ஃபெர்னான்டோ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ரொனால்டோ ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தார்கள்.
𝗢𝗯𝗿𝗶𝗴𝗮𝗱𝗼 por tudo, Mister Fernando Santos. 🤝 #VesteABandeira pic.twitter.com/L20QjwfQve
— Portugal (@selecaoportugal) December 15, 2022
இந்நிலையில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஃபெர்னான்டோ சான்டோஸ் ராஜினாமா செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குல்தீப், சீராஜ் அபாரம்... இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் சரிந்த வங்கதேசம்
தானாக விருப்பத்துடன் ஃபெர்னான்டோ ராஜினாமா செய்தாரா அல்லது நிர்பந்திக்கப்பட்டாரா என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. 68 வயதாகும் சான்டோஸ் போர்ச்சுகல் அணியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஆனால், ரொனால்டோவுடன் உலகக்கோப்பை தொடரில் அவர் நடந்துகொண்ட விதம், தனிப்பட்ட விரோதமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.
அணியின் அடுத்த பயிற்சியாளராக ஜோஸ் மோரினோ நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சர்வதேச போட்டிகளில் மோரினோவுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், ஐரோப்பாவில் நடந்த ஆட்டங்களில் மோரினோ கவனம் ஈர்த்திருக்கிறார்.
அடுத்ததாக 2024-ல் யூரோ கோப்பை கால்பந்தாட்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தகுதி பெறுவது என்பது போர்ச்சுகல் அணிக்கு அடுத்து இருக்கும் டாஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA World Cup 2022, Football