Euro 2020 | ரொனால்டோவின் 104வது கோல்: இஸ்ரேலை 4-0 என்று வீழ்த்திய போர்ச்சுகல்

ரொனால்டோ.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் நாளை 11ம் தேதி நள்ளிரவு தொடங்குகிறது, அந்தப் போட்டித் தொடருக்கு முந்தைய தயாரிப்பு வார்ம்-அப் பிரெண்ட்லி சர்வதேசப் போட்டியில் போர்ச்சுகல் அணி இஸ்ரேலை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.

  • Share this:
    ங  கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 104வது சர்வதேச கோலை அடித்தார். ஈரான் ஸ்ட்ரைக்கர் அலி டேய் என்பவரின் 109 கோல் அனைத்து கால சாதனையை சமன் செய்ய இன்னும் 5 கோல்களே ரொனால்டோவுக்கு உள்ளது.

    தலைநகரமான லிஸ்பனில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் முழு ஆதிக்கம் செலுத்தியது. சூப்பர் ஸ்டார்களான ரூபன் டயஸ், ஜோவோ கான்சலோ, பெர்னார்டோ சில்வா, புரூனோ பெர்னாண்டஸ் ஆகியோர் அணிக்குத் திரும்பினர்.

    Also Read:  Euro Cup 2021: ஜூன் 11ம் தேதி யூரோ கோப்பை கால்பந்து : அணிகள், குரூப்கள், போட்டி அட்டவணை- இந்திய நேரம்

    ரொனால்டோவுடன் இந்த தொடரில் பார்க்க வேண்டிய ஒரு ஸ்டார் புரூனோ பெர்னாண்டஸ், தொடக்கத்தில் இவர் வசமே பந்து இருந்தது. மிட்பீல்டரான பெர்னாண்டஸ் முதலில் இறுக்கத்தை உடைத்தார், 42வது நிமிடத்தில் வலது புறம் கான்செலோ பந்தை பெர்னாண்டஸிடம் அடிக்க அவர் அதை கோலாக மாற்றினார்.

    Also Read: Sunil Chhetri | கால்பந்தாட்டம் அறிந்தவர்கள் என்னையும் மெஸ்ஸியையும் ஒப்பிட மாட்டார்கள்: சுனில் சேத்ரி

    பிறகு 2வது கோலுக்கு பெரிய அளவில் அசிஸ்ட் செய்தார் பெர்னாண்டஸ். இவர் ரொனால்டோவிடம் பந்தை அடிக்க ரொனால்டோ இடது காலால் சக்தி வாய்ந்த ஷாட்டை கோலை நோக்கி அடிக்க இஸ்ரேல் கோல் கீப்பர் மர்சியானோவினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. ரொனால்டோவின் 104வது கோலாக இது அமைந்தது.

    Also Read: Euro 2020: கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து?- குரூப் டி அணிகள், வீரர்கள், நட்சத்திரங்கள்

    இடைவேளைக்குப் பிறகும் போர்ச்சுகல் ஆதிக்கம் நீடித்தது. பெர்னார்டோ சில்வா, இஸ்ரேல் கோல் கீப்பருடன் நேருக்கு நேர் வந்த ஒரு தருணத்தில் கோல் வாய்ப்பை தவற விட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் 86வது நிமிடத்தில் கான்செலோவின் மிக அபாரமான ஒரு ஆட்டத்தில் வலது புறத்திலிருந்து மின்னல்வேகத்தில் உள்ளே புகுந்து இடது காலால் ஒரு உதை உதைக்க பந்து இஸ்ரேல் கோலுக்குள் மோதியது, போர்ச்சுகல் 3வது கோலை அடித்தது.

    பிறகு 91வது நிமிடத்தில் மீண்டும் புரூனோ பெர்னாண்டஸ் தனக்கு வந்த பந்தை பாக்ஸுக்கு வெளியே இருந்து வலது காலால் ஒரே உதை உதைக்க பந்து கோலுக்குள் கதறியது. டாப் லெஃட் கார்னரில் கோல் ஆனது. போர்ச்சுகல் 4-0 என்று வென்றது. பெர்னாண்டஸ் 2 கோல்கள், ரொனால்டோ 1 கோல், கான்செலோவின் ஒரு அற்புத கோல் என்று வார்ம் அப் போட்டி பிரமாதமாக அமைந்தது போர்ச்சுகலுக்கு.

    போர்ச்சுகல் கடினமான பிரிவில் உள்ளது, குரூப் ஆப் டெத் என்று அழைக்கப்படும் பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல், ஹங்கேரி பிரிவு கடினமானது, ஆனால் கடந்த யூரோ சாம்பியன் போர்ச்சுகல் பிரமாதமான ஒரு அணியாகத் திகழ்வதால் சாம்பியன்களாக வாய்ப்புள்ளது.
    Published by:Muthukumar
    First published: