பிரதமர் நரேந்திர
மோடி, இந்தியாவின் புதிய குத்துச்சண்டை உலக சாம்பியனான நிகத் ஜரீன் மற்றும் சமீபத்தில் இஸ்தான்புல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மனிஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
“நமது பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தது பெரிய கவுரவம். நன்றி பிரதமர் மோடி,” என்று மோடியுடன் கூடிய படத்துடன் சந்திப்புக்குப் பிறகு ட்வீட் செய்துள்ளார் நிகத் ஜரீன்:
மனிஷா தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் பிரதமர் நரேந்திர மோடிஜியின் சந்திப்பு மரியாதைக்குரியது. உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி." என்று பதிவிட்டுள்ளார்:
சர்வதேச அரங்கில் விளையாட்டு சாதனைகளுக்கான பிரதமர் மோடியின் ஆர்வம் நன்கு அறியப்பட்டதாகும், மேலும் விளையாட்டு வீரர்களுக்கான பிரதமரின் ஆர்வமும் ஆதரவும் பல விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் தேசத்தின் பெருமைக்கு ஊக்கப்படுத்தியுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் தரமான பயிற்சிகளை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தி, இந்திய விளையாட்டுகளை மேம்படுத்த பிரதமர் செயல்படுத்திய நடவடிக்கைகள், சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியா பெற்றுள்ள சமீபத்திய வெற்றியின் மூலம், எதிர்காலத்தில் பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.