சாதனை மங்கை பி.வி.சிந்துவிற்கு குவியும் பாராட்டுகள்... பிரதமர் மோடி வாழ்த்து

Vijay R | news18-tamil
Updated: August 27, 2019, 6:06 PM IST
சாதனை மங்கை பி.வி.சிந்துவிற்கு குவியும் பாராட்டுகள்... பிரதமர் மோடி வாழ்த்து
பி.வி.சிந்து - பிரதமர் மோடி
Vijay R | news18-tamil
Updated: August 27, 2019, 6:06 PM IST
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று தாயகம் திரும்பிய பி.வி. சிந்து, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சுவிட்சர்லாந்தின் பாசில் நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 4ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமியை பி.வி.சிந்து எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து முதன்முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.





 


Loading...




View this post on Instagram




 

I could not hold back my tears when I saw the Indian flag 🇮🇳 and heard the National anthem playing. Words can’t express my feelings about yesterday's win at the World Championship. Had been preparing for it for so long. Finally, the wait ended. It wouldn’t have been possible without the support of my Parents, my coaches ( Gopi sir and Ms Kim ) and my trainer ( mr Srikanth Verma) And most Importantly I would like to thank my sponsors and all my fans who have supported me all along.🙏🏻🙏🏻 FINALLY WORLD CHAMPION 2019🥇 #worldchampion2019#goldmedal#basel#finallydoneit#happymoment#thankyousuchitraacademy#cannotexpressinwords#thankyoueveryoneforyoursupportandlove#🙏🏻🙏🏻


A post shared by sindhu pv (@pvsindhu1) on






உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரில் தங்கம் வென்று தாயகம் திரும்பிய இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் டெல்லி வந்த சிந்துவை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பேசிய சிந்து, 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று, அதிலும் சாதிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றார்.

சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்த வண்ணமாக உள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பி.வி.சிந்துவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து கூறிய பிரதமர், சந்திப்பு தொடர்பான படங்களை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.



முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சந்தித்து, சிந்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Also Watch

First published: August 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...