Home /News /sports /

பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்- ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் சாதனை!

பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்- ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் சாதனை!

சுமித் அன்டில்

சுமித் அன்டில்

தனது முதல் வாய்ப்பிலேயே 66.95 மீட்டருக்கு ஈட்டி  எறிந்து சுமித் அன்டில் அசத்தினார். அடுத்தடுத்த வாய்ப்புகளில் முறையே, 68.08,  65.27, 66.71, 68.55  மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து அவர் பிரமிக்க வைத்தார்.

    பாராஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராஒலிம்பிக் போட்டியின் இன்றைய நாளில் ஈட்டி எறிதல் ஆட்டம் நடத்தப்பட்டது. ஈட்டி எறிதல் போட்டியின் எஃப்64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் பங்கேற்றார். தனது முதல் வாய்ப்பிலேயே 66.95 மீட்டருக்கு ஈட்டி  எறிந்து அவர் அசத்தினார். பின்னர், அடுத்தடுத்த வாய்ப்புகளில் முறையே, 68.08,  65.27, 66.71, 68.55  மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து அவர் பிரமிக்க வைத்தார். இதில் 68.55 மீட்டர் என்பது புதிய உலக சாதனை ஆகும்.

    இறுதியில் சுமித் அன்டில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.  ஆஸ்திரேலியாவின் புரியன் மைக்கல் 66.29 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் இலங்கையின் கொடித்துவக்கு துலன் 65.61 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

    சுமித் அன்டில் பெற்ற தங்கப் பதக்கத்தால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்தை இந்திய அணி வென்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: India, News On Instagram, Tokyo Paralympics

    அடுத்த செய்தி