உன் கீழாடை மிகவும் குட்டையாக உள்ளது, எல்லாம் தெரிகிறது: அவமானப்படுத்தப்பட்ட மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் வீராங்கனை

ஆலிவியா பிரீன்

வெல்ஷ் நாட்டைச் சேர்ந்த பாரா-ஒலிம்பிக் தடகள வீராங்கனை ஆலிவியா பிரீன் இங்கிலிஷ் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித் தொடரில் பங்கேற்றார். அப்போது போட்டிக்காக அவர் அணிந்திருந்த ஆடை மிகவும் குட்டையாக எல்லாம் தெரிவது போல் உள்ளது, இது முறையல்ல என்று போட்டி அமைப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது கண்டு வாயடைத்துப் போனார்.

 • Share this:
  பெட்போர்டில் இவர் லாங் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது இங்கிச்லித் சாம்பியன்ஷிப் அதிகாரி ஒருவர் உன் கீழாடை மிகச்சிறியதாக இருக்கிறது, எல்லாம் தெரிகிறது, இது முறையல்ல என்று கூறியுள்ளார். இதனால் பெருத்த அவமானம் அடைந்தார் மாற்றுத் திறனாளி வீராங்கனை ஆலிவியா பிரீன்.

  ஆலிவியா பிரீன் பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருபவர்.

  இதனையடுத்து அவமானமடைந்த ஆலிவியா பிரீன், “நான் பல ஆண்டுகளாக இந்த பிரீஃபைத்தான் அணிகிறேன் இது இந்தப் போட்டிக்கென தயாரிக்கப்பட்டது. டோக்கியோவிலும் இதை அணிவேன்.  ஆனால் என் கேள்வி என்னவெனில் ஒரு ஆண் வீரர் இதே போன்று அணிந்தால் இப்படி சொல்வார்களா என்பதே. மற்ற பெண் வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்னை இல்லை. எப்போதும் பெண்கள்தான் தங்கள் ஆடை பற்றிய கவனமேற்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

  இது தொடர்பாக நான் பிரிட்டன் தடகள அமைப்பிடம் புகார் எழுப்புவேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிரீன் தங்கப்பதக்கங்களை வென்றவர். 4x100m 2015-ல் தங்கம், 2017-ல் லாங் ஜம்ப்பில் தங்கம்.  2018 கோல்டு கோஸ்ட் காமன் வெல்த் போட்டியில் லாங் ஜம்ப்பில் அவர் தங்கம் வென்றார். அடுத்த மாதம் டோக்கியோவில் தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறார்.

  அவரது ஸ்போர்ட்ஸ் ஆடை பற்றி இப்படிக் கருத்துக் கூறியவர் ஒரு பெண் அதிகாரி என்பதே. இது தொடர்பாக ஆலிவியா பிரீன் கூறும்போது, “அவருக்கு கொஞ்சம் நாகரிகம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும், அவர்பாட்டுக்கு வந்து ஒரு பெண்ணிடம் இப்படி ஆடை உடுத்து இது சரியில்லை என்றெல்லாம் கூற முடியாது” என்று ஸ்கை ஸ்போர்ட்சில் கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: