இரண்டு ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் லெஜண்ட் கேசவ் தத் காலமானார்

இந்திய ஹாக்கி லெஜண்ட் கேசவ் சந்திர தத் காலமானார்.

உலக ஹாக்கியில் இந்திய அணி கலக்கிய பொற்காலத்தின் வீரரான, இருமுறை ஒலிம்பிக் தங்கம் வென்ற, இந்திய அணியின் லெஜண்டான முன்னாள் ஹாக்கி வீரர் கேசவ் சந்திர தத் காலமானார். அவருக்கு வயது 95

  • Share this:
    வயது முதிர்வு காரணமாக அவர் மரணமடைந்தார், கொல்கத்தாவில் உள்ள சந்தோஷ்பூரில் இருக்கும் அவரது இல்லத்தில் அதிகாலை 12.30 மணியளவில் அவர் உயிர் மண்ணுலகை நீத்தது.

    1948-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டனை லண்டனில் உள்ள வெம்பிலியில் 4-0 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அணி வென்ற முதல் ஒலிம்பிக் ஹாக்கி தங்கமாகும் இது, இந்த அணியில் கேசவ் தத் இடம்பெற்றிருந்தார்.

    1947-ம் ஆண்டு இந்திய ஹாக்கியின் மற்றொரு லெஜண்ட் ஆன தயான் சந்த் தலைமையில் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட அணியில் கேசவ் தத் இருந்தார்.

    கேசவ் தத் 1925ம் ஆண்டு லாகூரில் பிறந்தார். 1952ம் ஆண்டு ஹெல்சிங்கி கேம்ஸின் போதும் இந்திய ஹாக்கி அணியில் ஆடினார் கேசவ் தத். இந்தத் தொடரில் ஹாலந்து அணியை 6-1 என்ற கோல் மழையில் இந்திய ஹாக்கி அணி வீழ்த்தி 5வது முறையாக ஒலிம்பிக் ஹாக்கி தங்கம் வென்றது இந்திய அணி.

    அந்த ஹாக்கி அணி, அந்தத் திறமை இப்போது எங்கே என்று தேடுபவர்களுக்கு இத்தகைய இந்திய லெஜண்ட்களின் சாதனைக் கதைகள் தான் பொக்கிஷமாக உள்ளன. ஒரு விதத்தில் அப்போதைய இந்திய ஹாக்கி அணி கால்பந்தில் பிரேசில் போன்றுதான் வீழ்த்தவே முடியாததாக இருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மோகன் பகான் ஹாக்கி அணிக்கு கேப்டனாகவும் கேசவ் தத் இருந்திருக்கிறார். ஹாக்கி லீகை இவர் தலைமையில் 6 முறை வென்றிருக்கிறார். பெய்ட்டன் கோப்பை ஹாக்கி தொடரை 3 முறை வென்றுள்ளார், இதெல்லாம் அவரது ஹாக்கி வாழ்வின் 10 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளாகும்.

    2019-ல் மோகன் பகான் ரத்னா விருது இவருக்கு அளிக்கப்பட்டது. இன்று இந்த லெஜண்ட் சாதனைகளை மட்டுமே, நினைவுகளை மட்டுமே நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார்.

    இவரது மரணத்தையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு மற்றும் முன்னாள், இந்நாள் வீரர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: