ஐரோப்பா லீக் கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது அர்சனல் அணி!

ஐரோப்பா லீக் கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது அர்சனல் அணி!
  • Share this:
ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரிலிருந்து ஆர்சனல் அணி வெளியேறி  உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செவ்வாய் அன்று லண்டனில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிகாஸ் அணியும், ஆர்சனல் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களுமே கோல் அடிக்க கடுமையாக முயன்றனர். ஆனால் இரு அணி வீரர்களின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. இருப்பினும் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஒலிம்பியாகோஸ் அணியின் எல் அரபி கோல் அடித்தது அந்த அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவிய ஆர்சனல் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்