ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி : மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்

உலகக்கோப்பை ஹாக்கி : மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்

பரபரப்பாக நடந்த ஸ்பெயின் - மலேசியா ஆட்டம்

பரபரப்பாக நடந்த ஸ்பெயின் - மலேசியா ஆட்டம்

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோலை அடித்ததால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற க்ராஸ் ஓவர் ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. பெனால்டி ஷூட்டிற்கு சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா மைதானங்களில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன.

லீக் சுற்றுகள் முடிந்து அடுத்ததாக கிராஸ் ஓவர் சுற்றுகள் தற்போது நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்கு நேரடியாக முன்னேறி விட்டன. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏ,பி,சி,டி என 4 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற வைக்கப்பட்டுள்ளன. இந்தியா குரூப் டி-யில் உள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, அடுத்ததாக இங்கிலாந்துடன் நடந்த போட்டியை 2-2 என டிரா செய்தது. இதையடுத்து குரூப்பில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்காக நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

குரூப் டி பிரிவில் இந்தியாவும் இங்கிலாந்தும் 2 வெற்றி மற்றும் ஒரு டிரா என சமமாக இருந்தாலும், கோல் கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இதையடுத்து கிராஸ் ஓவர் போட்டியில் இந்தியா தற்போது நியூசிலாந்து அணியை எதிர்கொண்டுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக மலேசியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதிய கிராஸ் ஓவர் ஆட்டம் புவனேஸ்வரில் இன்று நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோலை அடித்ததால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின்வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியில் ஸ்பெயின் அணி வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

First published:

Tags: World Cup Hockey 2023