முகப்பு /செய்தி /விளையாட்டு / தடுப்பூசி போடாமல் நுழைந்த நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படுவார் - ஆஸ்திரேலிய அரசு

தடுப்பூசி போடாமல் நுழைந்த நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படுவார் - ஆஸ்திரேலிய அரசு

Novak Djokovic

Novak Djokovic

Novak Djokovic | ஜோகோவிச்சை சிறை வைத்து அவமதிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு செயல்பட்டு வருவதாக அந்நாட்டுக்கு செர்பிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படுவார் என அந்நாட்டு துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக திகழ்பவர் செர்பியாவைச் சேர்ந்த 34 வயதாகும் நோவக் ஜோகோவிச். கிராண்ட் ஸ்லாம் போட்டித்தொடர்களுள் ஒன்றான ‘ஆஸ்திரேலிய ஓபன்’ வரும் ஜனவரி 17ம் தேதி தொடங்க இருக்கிறது. நடப்பு சாம்பியனான ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்வதற்காக துபாய் வழியாக மெல்போர்ன் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என போட்டி அமைப்பும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நோவக் ஜோகோவிச் மெல்போர்ன் வந்த பின்னர் அவருடைய விசாவை ஆஸ்திரேலிய அரசு அதிரடியாக ரத்து செய்தது. அவர் ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, மெல்போர்ன் விமான நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Also read:   இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான ஜோகோவிச் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இதற்காக ஆஸி ஓபன் போட்டி அமைப்பிடம் இருந்து சிறப்பு விலக்கு பெற்றுள்ளதாக ஜோகோவிச் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், என்ன மருத்துவ காரணத்திற்காக அவர் விலக்கு பெற்றிருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

இதனிடையே அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் நுழைவதற்கான தகுந்த ஆதாரங்களை வழங்க தவறிவிட்டார். எனவே அவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியர்கள் அல்லாத வெளிநாட்டினர் தகுந்த விசா வைத்திருக்காவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே 9 முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருக்கும் ஜோகோவிச், ஆஸ்திரேலிய அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also read:  ‘மோடி வாழ்க’ என கோஷமிட்டு பாஜகவினரிடம் இருந்து விடுபட்ட பஞ்சாப் துணை முதல்வர் - வைரல் வீடியோ

ஜோகோவின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோகோவிச் விவகாரம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகள் விதிகள் தான், யாரும் விதிகளுக்கு மேலானவர்கள் கிடையாது. உலகின் மிக குறைந்த கொரோனா இறப்பு விகிதம் கொண்ட நாடுகளுள் ஒன்றாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்போம் என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சட்டத்திற்கு மேலானவர்கள் என கருதி செல்வந்தர்கள் உலகில் தங்கள் இஷ்டப்படி நடமாடலாம் என நினைக்கக் கூடாது. ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை நகைச்சுவையாக அவர் கருதுகிறார் என தெரிவித்தார்.

இதனிடையே ஜோகோவிச்சை சிறை வைத்து அவமதிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு செயல்பட்டு வருவதாக அந்நாட்டுக்கு செர்பிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Australia, Novak Djokovic