• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நான் முதலமைச்சர் இல்லங்க.. என்ன விட்டிடுங்க..: ஹாக்கி வீரர் அமரீந்தர் சிங் டிவிட்!

நான் முதலமைச்சர் இல்லங்க.. என்ன விட்டிடுங்க..: ஹாக்கி வீரர் அமரீந்தர் சிங் டிவிட்!

அமரீந்தர் சிங்

அமரீந்தர் சிங்

ஊடகங்களில் சில ட்விட்டரில் கேப்டன் அமரீந்தர் சிங்கை டேக் செய்வதற்கு பதிலாக இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர்  அமரீந்தர் சிங்கை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்து அவர் டிவிட் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கை ட்விட்டரில் டேக் செய்வதற்கு பதிலாக இந்திய ஹாக்கி அணி வீரர் அமரீந்தர் சிங்கை  ஊடகங்கள் டேக்  செய்த நிலையில், இது தொடர்பாக கலகலப்பான பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வராக இருந்த  அமரீந்தர் சிங் உட்கட்சி மோதல் காரணமாக அண்மையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து. புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக்கொண்டார்.

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங், தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்வதாக கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று அவரது டெல்லி இல்லத்திற்கு சென்று அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார். காங்கிரஸின் முக்கிய தலைவர் ஒருவர் அமித் ஷாவை சந்தித்தது இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்களில் சில ட்விட்டரில் கேப்டன் அமரீந்தர் சிங்கை டேக் செய்வதற்கு பதிலாக இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர்  அமரீந்தர் சிங்கை செய்ததாக கூறப்படுகிறது.

    பாஜகவில் சேர முடிவு?: மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் சந்திப்பு!






    இதையடுத்து இந்திய ஹாக்கி அணி வீரர் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்புள்ள செய்தி ஊடகம், பத்திரிகையாளர்கள், நான் அம்ரிந்தர் சிங், இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர்  பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்  அல்ல, தயவுசெய்து என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே, ஹாக்கி வீரர் அமரீந்தரின் ட்விட்டை ரீ-டிவிட் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் அமரிந்தர் சிங்,  “என் இளம் நண்பனே, நான் உங்களை புரிந்து கொள்கிறேன். நீங்கள் விளையாட்டில் முன்னேற வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: