நார்வே செஸ் தொடரின் 6வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார், ஆனாலும் 1.5 புள்ளிகளே பெற்றதாலும் கார்ல்சன் இன்னொரு போட்டியில் நேரடியாக வென்று 3 புள்ளிகளைப் பெற்றதாலும் கார்ல்சன் முதலிடம் முன்னேற முதலிடத்திலிருந்த ஆனந்து 2ம் இடத்துக்கு பின்னடைந்தார்.
நார்வே செஸ் தொடரின் 6வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார், ஆனாலும் 1.5 புள்ளிகளே பெற்றதாலும் கார்ல்சன் இன்னொரு போட்டியில் நேரடியாக வென்று 3 புள்ளிகளைப் பெற்றதாலும் கார்ல்சன் முதலிடம் முன்னேற முதலிடத்திலிருந்த ஆனந்து 2ம் இடத்துக்கு பின்னடைந்தார்.
நார்வேயில் உலக செஸ் தொடர் நடைபெற்று வருகிறது, இதில் உலகின் நம்பர் 1 கார்ல்சன், அனிஷ் கிரி, விஸ்வநாதன் ஆனந்த், டோபலோவ் உட்பட 10 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு ஆடி வருகின்றனர்.
இதில் முதல் 5 சுற்றுகளில் 4 வெற்றி ஒரு தோல்வி அடைந்திருந்த ஆனந்த் 6வது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியைச் சந்தித்தார். இந்த பிரதான சுற்று ஆட்டம் 35 நகர்த்தல்களுடன் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டிரா என்ற உடன்படிக்கை ஏற்பட்டது.
இதனையடுத்து டைபிரேக்கர் சுற்றான ‘சடன் டெத்’ விரைவு கதி ஆட்டத்தில் 45வது நகர்த்தலில் ஆட்டம் மீண்டும் ட்ரா ஆனது. ஆனால் சடன் டெத் விதிகளின் படி டிரா ஆனால் கறுப்பு காய்களுடன் ஆடியவர் வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவார், அந்த வகையில் ஆனந்த் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் 1.5 புள்ளிகள் மட்டுமே ஆனந்துக்குக் கிடைத்தது.
இதே நாளில் மற்றொரு போட்டியில் அஜர்பெய்ஜான் வீரர் ஷாரியாரை பிரதான சுற்றிலேயே கார்ல்சன் வீழ்த்த அவருக்கு 3 புள்ளிகள் கிடைத்ததால் 12.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 1-ம் இடத்துக்கு முன்னேற, ஆனந்த் 11.5 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு வந்தார்.
அமெரிக்காவின் சோ வெஸ்லி 10 புள்ளிகள், அஜர்பெய்ஜானின் ஷாரியார் 8.5 புள்ளிகள், பிரான்சின் வசீயர் 8.5 புள்ளிகள், அனிஷ் கிரி 8 புள்ளிகள் என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த் அடுத்த சுற்றில் ரத்ஜம்போவை சந்திக்கிறார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.