Home /News /sports /

நார்வே செஸ்: ஒரு சிறு நகர்த்தல் பெரிய தவறானது: 22 மூவ்களில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வி

நார்வே செஸ்: ஒரு சிறு நகர்த்தல் பெரிய தவறானது: 22 மூவ்களில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வி

விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த்

நார்வே செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் 9வது சுற்றில் அஜர்பெய்ஜான் வீரர் ஷக்ரியர் மேமிடியரவ் என்பவரிடம் தோல்வி கண்டு 3ம் இடத்துக்குச் சரிந்தார். மாறாக உலக நம்பர் 1 கார்ல்சென், பிரான்சின் மேக்சிமி வஷியர் லக்கிரேவ்வை வீழ்த்தி முதலிடத்தை தக்க வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
    நார்வே செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் 9வது சுற்றில் அஜர்பெய்ஜான் வீரர் ஷக்ரியர் மேமிடியரவ் என்பவரிடம் தோல்வி கண்டு 3ம் இடத்துக்குச் சரிந்தார். மாறாக உலக நம்பர் 1 கார்ல்சென், பிரான்சின் மேக்சிமி வஷியர் லக்கிரேவ்வை வீழ்த்தி முதலிடத்தை தக்க வைத்தார்.

    விஸ்வநாதன் செம பார்மில் இருந்து சற்றே பின்னடைவு கண்டார், இதனையடுத்து 22 நகர்த்தல்களில் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வி கண்டார். விஸ்வநாதன் ஆனந்த் செய்த ஒரு தவறை பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்ட அஜர்பெய்ஜான் வீரர் வெற்றி பெற்று 3 புள்ளிகளைப் பெற்றார்.

    7 ரவுண்டு முடிவில் நம்பர் 2-ல் இடத்தில் இருந்த ஆனந்த் இப்போது 13 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு சரிந்தார்.

    நேற்றைய ஆட்டத்தில் அஜர்பெய்ஜான் வீரருக்கு சரிக்கு சமமாக நகர்வுகளை மேற்கொண்ட ஆனந்த் கடைசியில் செய்த பெரிய தவறு என்னவெனில் ராணியை ராஜா, பிஷப், குதிரைக்கு அருகில் இருந்து நகர்த்தி பி5 கட்டத்துக்குக் கொண்டு சென்றார். அந்த இடத்தில் குயின் இருந்ததுதான் அஜர்பெய்ஜான் வீரரின் தயக்கத்துக்குக் காரணமாக இருந்தது, ஆனால் குயீனை பி5 கட்டத்துக்கு ஆனந்த் கொண்டு செல்ல பெரிய ரிலீஸ் கிடைத்தது அஜர்பெய்ஜான் வீரருக்கு. இந்த இடத்தில் அஜர்பெய்ஜான் வீரர் தன் வெற்றியை முடிவு செய்தார்.

    இந்த இடத்தில் அஜர்பெய்ஜான் வீரர் வெற்றி உறுதி என்று ஆனவுடன் ஆனந்த் தோல்வியை ஒப்புக் கொண்டார். 22வது நகர்வில் ஆட்டம் முடிந்து போனது. அந்த ராணியை இடது புறம் பி5க்கு நகர்த்தாமல் வலது புறம் 3 கட்டங்கள் குறுக்காக கொண்டு சென்றிருந்தால் கூட அஜர்பெய்ஜான் வீரரை மிரட்டியிருக்கலாம். ஆனால் ஆனந்த் ஏற்கெனவே பாதுகாப்பு வளையத்திலிருந்து ராஜாவையும் முன் கட்டத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

    மாறாக அஜர்பெய்ஜான் வீரர் தன் இடது புறம் அனைத்துப் பவர்களான குயின், குதிரை, பிஷப், மற்றும் ஒன்றிரண்டு பான்களை வைத்து விஸ்வநாதன் ஆனந்தை மிரட்டி முடக்கினார் என்றே கூற வேண்டும். அதற்குப் பதிலடி கொடுக்க அவரது கவனத்தைத் திசைத்திருப்பவே ஆனந்த் குயீனை பி5 கட்டத்துக்கு நகர்த்தியிருக்கலாம், ஆனால் அதுவே தோல்விக்குக் காரணமானது.

    அஜர்பெய்ஜான் வீரரின் இரண்டு யானைகள் அதன் அருகே ராஜா என்று காலியாக இருந்ததும் ஒரு நப்பாசையில் ஆனந்த் குவீனைக் கொண்டு போய் பி5 கட்டத்தில் நிறுத்தினார், ஆனால் அதுவே அவரது முடிவாகிப் போனது.

    இப்போது கார்ல்சன் 15 புள்ளிகளுடன் முதலிடம் அஜர்பெய்ஜான் வீரர் மேமிடியரவ் 14.5 புள்ளிகளுடன் 2ம் இடம். ஆனந்த் 3 வது இடம் பிரான்ஸ் வீரர் லாகிரேவ் 4ம் இடம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chess, Viswanathan Anand

    அடுத்த செய்தி