Sunil Chhetri | கால்பந்தாட்டம் அறிந்தவர்கள் என்னையும் மெஸ்ஸியையும் ஒப்பிட மாட்டார்கள்: சுனில் சேத்ரி

கேப்டன் சுனில் சேத்ரி

சர்வதேச அளவில் சிறப்புவாய்ந்த வீரராக விளங்கும் லயோனல் மெஸ்ஸி படைத்திருக்கும் உலக சாதனையை தகர்த்து காலபந்தாட்டத்தில் புதிய சரித்திரம் படைத்த இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி தன்னையும் மெஸ்ஸியையும் ஒப்பிடவே கூடாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

  • Share this:
    சுனில் சேத்ரி சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில், அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸியினை முந்தியிருக்கிறார். இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த சர்வதேச நடப்பு வீரர்கள் வரிசையில் அவர் 2ம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.

    இந்நிலையில் மெய்நிகர் சந்திப்பில் சுனில் சேத்ரி கூறியதாவது:

    இதுதான் என்னுடைய நிலைப்பாடு: என்னையும் மெஸ்ஸியையும் ஒருபோதும் ஒப்பிடக் கூடாது. அந்தப் பட்டியலில் உள்ள வேறு எந்த வீரருடனும் என்னை ஒப்பிடக் கூடாது. ஆயிரம் கால்பந்தாட்ட வீரர்கள் இருக்கின்றனர், என்னையும் சேர்த்து, நாங்கள் அனைவருமே லியோனல் மெஸ்ஸியின் விசிறிகள்.

    Also Read: Sunil Chhetri: லயோனல் மெஸ்ஸியின் சர்வதேச சாதனையை தகர்த்த இந்திய வீரர் சுனில் சேத்ரி!

    இதுதான் எதார்த்தம் கால்பந்தை நன்றாக அறிந்தவர்கள் என்னையும் மெஸ்ஸியையும் ஒப்பிட மாட்டார்கள். ஆனால் எனக்கு பெருமை அளிக்கக் கூடிய விஷயம் என்னவெனில் நாட்டுக்காக 100 போட்டிகளுக்கும் மேல் ஆடியுள்ளதுதான்., என்றார் சுனில் சேத்ரி.

    அன்று வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியில் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்தார். இதன் மூலம் மொத்தம் 74 கோல்களை சேத்ரி அடித்துள்ளார். கிறிஸ்டியானோ நடப்பு கால்பந்து வீரர்களில் ரொனால்டோ 103 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

    Also Read: India vs Bangladesh: இந்தியா அபாரம்- வங்கதேசத்தை 2-0 என்று வீழ்த்தியது- 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றி

    இந்நிலையில் 36 வயதாகும் சுனில் சேத்ரிக்குப் பிறகு யார் என்ற கேள்வி அவருக்கே அழுத்தத்தை அதிகரிக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சேத்ரி, “என் அழுத்தத்துக்குக் காரணமாக அதை எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னைவிடவும் அதிக கோல்களை அடிக்கும் வீரர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு வருவார்கள். ஆனால் இதற்கு காலம் பிடிக்கும். அடுத்த ஐஎஸ்எல் லீக் முதல் 4 வெளிநாட்டு வீரர்களுக்குத்தான் அனுமதி, அப்போது இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஸ்ட்ரைக்கர்களுக்கு இரண்டு மந்திரங்கள்தான் அதிக போட்டிகள், கடின உழைப்பு என்பதே தாரக மந்திரம். அடுத்த 10-20 ஆண்டுகளில் என்னை விடவும் திறமைசாலிகள் வருவார்கள். என்னைப்போன்ற வீரர்களை மட்டுமே உருவாக்கினால் எங்கு இருக்கிறோமோ அங்கேயே இருக்க வேண்டியதுதான் என்னை விட திறமைசாலிகளை உருவாக்க வேண்டும்.

    அணி வீரர்கள் இன்னும் கொஞ்சம் தைரியமாக ஆட வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய அணி அதிக பாஸ்களை ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். பாஸ் செய்து பந்தை எடுத்துச் செல்வதே எனக்கு பிடித்தமான கால்பந்து. இதுதான் அதிக கோல் வாய்ப்புகளை உருவாக்கும். நம் ஓட்டமும் குறையும்.”

    இவ்வாறு கூறுகிறார் சுனில் சேத்ரி.
    Published by:Muthukumar
    First published: