முக்கிய வீரரின் கேப்டன் பதவி பறிப்பு!

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணி வீரரான டேனிஸ் ஆல்வீஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய வீரரின் கேப்டன் பதவி பறிப்பு!
பயிற்சியின் போது நெய்மர்
  • News18
  • Last Updated: May 29, 2019, 6:35 PM IST
  • Share this:
பிரேசில் கால்பந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து நெய்மர் நீக்கப்பட்டுள்ளார்.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி பிரேசிலில் துவங்க உள்ளது. இதில் பெரு, உருகுவே, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடர்கான பிரேசில் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நெய்மர் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணி வீரரான டேனிஸ் ஆல்வீஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு கோப்பை கிளப் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நெய்மர் தலைமையிலானபாரீஸ் செயிண்ட் ஜெர்மன் அணி, ரேன்னஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. தோல்வியின் விரக்தியில் இருந்த நெய்மரை ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த நெய்மர் ரசிகர் முகத்தில் குத்துவிட்டார்.

மைதானத்தில் ரசிகரை தாக்கியதால் நெய்மருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக தான் அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Also Watch

First published: May 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...